districts

திருச்சி முக்கிய செய்திகள்

திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்

புதுக்கோட்டை, ஜூன் 5 - திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு  நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாக சிறப்பு  முகாம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் 21.6.2024 அன்று காலை 10  மணியளவில் நடைபெற உள்ளது.

இச்சிறப்பு முகாமில் திருநங்கைகள் நல வாரி யங்கள் மூலம் வழங்கப் படும் அடையாள அட்டை  பதிவு செய்தல், ஆதார் அட்டையில் திருத்தம், முதலமைச்சரின் மருத்துவ  காப்பீட்டுத் திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை, வாக்காளர் அடை யாள அட்டை மற்றும் குடும்ப அட்டை போன்ற வற்றை பெற்றுக் கொள்ள லாம்.

எனவே புதுக் கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து திரு நங்கைகளும் கலந்துக்  கொண்டு பயன்பெறு மாறு மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரி வித்துள்ளார்.

அய்யம்பேட்டையில் மழை

பாபநாசம், ஜூன் 5- தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் புதனன்று மாலை இடி யுடன் கூடிய மழை பெய் தது. எதிர்பாராத மழை யால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. குறுவை பருவ ஆயத்தப்  பணிகளுக்கு இந்த மழை உதவும் என்று விவ சாயிகள் கருத்து தெரி வித்தனர். மழையால் கோடை வெப்பம் தணிந்து  குளிர்ந்த சூழல் நிலவி யது.

பள்ளிகள் திறப்பு: ஆயத்தப் பணிகள் ஆய்வு

தஞ்சாவூர், ஜூன் 5- கோடை விடுமுறை முடிந்து ஜூன் 10 அன்று பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது

விடுமுறை நாட்கள் கழிந்து பள்ளிகள் திறக்க விருப்பதால், பள்ளி களில் நடைபெறும் முன்  ஆயத்தப் பணிகள்  குறித்து, பட்டுக்கோட்டை  கல்வி மாவட்ட தொ டக்கக் கல்வி அலுவலர் கு.திராவிடச்செல்வம், புதன்கிழமை பேரா வூரணி பகுதி அரசுப் பள்ளிகளில் ஆய்வு மேற் கொண்டார். 

பேராவூரணி வட்டாட் சியர் அலுவலகம் எதிரே உள்ள ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப் பள்ளியில், பள்ளி வகுப் பறை கட்டிடம், கழிப் பறை, தண்ணீர் தொட்டி, சத்துணவுக் கூடம், சமை யலறை, பள்ளி வளாகம் உள்ளிட்ட இடங்களை அவர் ஆய்வு செய்தார்.

குழந்தைகள் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற 2 சிறுமிகள் மீட்பு

புதுக்கோட்டை, ஜூன் 5- புதுக்கோட்டையிலுள்ள குழந்தைகள் இல்லத்தில் கடந்த  சில நாட்களுக்கு முன்பு தப்பிச் சென்ற 3 சிறுமிகளில்,  2 சிறுமிகள் திங்கள்கிழமை இரவு மீட்கப்பட்டு, செவ்வாய்க் கிழமை இல்லத்தில் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை நரிமேடு பகுதியில் அன்னை சத்யா அரசு  குழந்தைகள் இல்லம் இயங்கி வருகிறது. இந்த இல்லத்தில்  இருந்து, குற்ற வழக்குகளில் தொடர்புடைய 3 சிறுமிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தப்பிச் சென்றனர். 

இதுதொடர்பாக கணேஷ் நகர் போலீசார் வழக்குப் பதிவு  செய்து சிறுமிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில், திருச்சி  மற்றும் திண்டுக்கல்லில் உள்ள அவர்களின் வீடுகளில் இரு  சிறுமிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டு, அங்கு சென்ற  போலீசார் திங்கள்கிழமை இரவு அவர்களை மீட்டு வந்த னர்.

அவர்கள், புதுக்கோட்டை சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். மற்றொரு சிறுமியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்ற னர்.

சீர்காழி அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை

மயிலாடுதுறை, ஜூன் 5- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு  மாவட்ட இசைப் பள்ளியில், மூன்று வருட முழுநேர அரசு சான்றிதழ் பயிற்சி 2024-2025  ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறு கிறது என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி தெரிவித்துள்ளார்.

சீர்காழி மாவட்ட அரசு இசைப்பள்ளி ஸ்ரீநகர் காலனி 6 வது குறுக்குத் தெரு, பனங்காட்டான்குடி என்ற முகவரியில் இயங்கி வருகிறது. தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின்கீழ் இயங்கி வரும் இசைப் பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய கலைகள், மூன்று  வருடம் முழுநேர பயிற்சி அளிக்கப்பட்டு தமிழக அரசின் சான்றிதழ் வழங்கப்படு கிறது. 

இப்பள்ளியில் பயிலும் மாணாக்கர் களுக்கு அரசு விதிகளின்படி இலவச விடுதி  வசதி, கல்வி ஊக்கத்தொகை மாதந்தோறும் 400 ரூபாய் மற்றும் இலவச பேருந்து கட்டணச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இப்பள்ளியில் சேருவதற்கு 13 வயது முதல் 25 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். குரலிசை, பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய கலை களுக்கு 7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றி ருந்தால் போதுமானது. நாதஸ்வரம், தவில்,  தேவாரம் ஆகிய கலைகளுக்கு எழுத  படிக்கத் தெரிந்தால் போதும். இந்தாண்டு கல்வி கட்டணம் ரூ.350 செலுத்த வேண்டும்.   மாணவ, மாணவியர் சேர்க்கை நடை பெற்று வருகிறது. ஆண்-பெண் இருபாலரும்  சேரலாம். 

மேற்கண்ட தகுதியுடைய நபர்கள் மேலும்  விவரங்களுக்கு தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, சீர்காழி என்ற  முகவரியிலும், எண்.9751674700 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ள லாம் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி  தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாநகராட்சி ஆணையர் குறித்து அவதூறு: 2 பேர் மீது வழக்கு

தஞ்சாவூர், ஜூன் 5-  தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் குறித்து சமூக வலை தளத்தில் அவதூறு பரப்பியதாக 2 பேர் மீது காவல்  துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ள னர்.

தஞ்சாவூர் மாநகராட்சியின் தற்போதைய ஆணையராக இருப்பவர் இரா.மகேஸ்வரி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் நகராட்சி ஆணையராக இருந்தார். அப்போது, ஒப்பந்தப் பணி வழங்குவது தொடர்பாக இவ ருக்கும், காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளையார் பாளை யத்தைச் சேர்ந்த கே.சுடர்மணிக்கும் முரண்பாடு ஏற்பட்டது.

இந்த முன் விரோதம் காரணமாக, தன்னைப் பற்றி  சமூக வலைதளத்தில் தவறான தகவல்களைக் கூறி அவ தூறு பரப்பி வருவதாக, சுடர்மணி மற்றும் மன்னார்குடி யைச் சேர்ந்த பாலு மீது தஞ்சாவூர் மேற்கு காவல் நிலை யத்தில் ஆணையர் மே 31 அன்று புகார் செய்தார். இதன்பேரில் சுடர் மணி, பாலு மீது மேற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண் டுள்ளனர்.

 

;