தஞ்சாவூர், ஜூலை 21- பாக் ஜலசந்தி கடல் பகுதியில் நில வும் கடல் சீற்றத்தால், தஞ்சை மாவட்டம் புதுப்பட்டினம், மனோரா, சின்னமனை, கே.ஆர்.காலனி, சேதுபாவாசத்திரம் கடற்கரைப் பகுதிகளில் கரும்புப் பாசி கள் எனப்படும் கடல் தாவரங்கள், கரை ஒதுங்கி வருகின்றன. பாக் ஜலசந்தி கடல் பகுதியில் அரிய வகை கடல் பசு, கடல் ஆமை, கடல் குதிரை, நட்சத்திர மீன்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. மேலும், இது தவிர, பல வகையான கடல்பாசி களும் இயற்கையாகவே கடலுக்கு அடி யில் வளர்ந்து வருகின்றன. இந்த கடல் பாசிகள் மீன் வளத்துக்கு காரணமாக வும், கடல் பசுக்களுக்கு முக்கிய உண வாகவும் அமைகிறது. இந்த கடல்பாசி அடர்ந்த கூட்டத்தில் தான் மீன்கள், இறால்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து வளர்கின்றன. இதனால் மீன்கள் பல்கிப் பெருக கடல் பாசிகள் காரணமாக உள்ளன. இந்நிலையில், தற்போது கடந்த சில நாட்களாக இப்பகுதியில் கடலுக்குள் பலத்த காற்று வீசி வருவதால் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் கடலின் அடியில் உள்ள கரும்பு பாசி கள் காற்றின் வேகத்தால் அறுபட்டு, மேல் பகுதிக்கு மிதந்து வந்து, கடல் அலை மற்றும் நீரோட்டத்தின் வேகத்தால் கடற்கரை பகுதி முழுவதும் கரை ஒதுங்கிக் கிடக்கின்றன. கரும்பு பாசிகளோடு கடற்தாழை செடிகளும் கரை ஒதுங்கிக் கிடக் கின்றன. கடலுக்குள் வளர்ந்து நிற்கும் ஒரு சில பாசி இனங்கள் மற்றும் இயற்கை தாவரங்களை உணவாக உட் கொண்டுதான் கடல் பசு உள்ளிட்ட பல அரிய வகை கடல்வாழ் உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன. கடற்கரையில் தேங்கிக் கிடக்கும் கரும்பு பாசிகள் அப்படியே மக்கி, துர்நாற்றம் வீசுவதால் மீனவர்களுக்கும், கடற்கரை ஓரம் வந்து செல்லும் பொது மக்களுக்கும், நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து மல்லிப்பட்டினம் மீனவர் பஷீர் கூறுகையில், “கரும்பு பாசிகள் மீனவர் விரிக்கும் வலையில் சிக்குவதால், மீன்கள் பிடிபடுவதில் தடை ஏற்படுகிறது. இதனால் மீன வர்கள் வலையில் குறைந்த அளவே மீன்களும் பிடிபடுகின்றன. இந்த வகை கரும்பு பாசிகள் கடற்கரையில் மூன்று பர்லாங் தூரம் முதல் ஆறு பர்லாங் தூரம் வரை கடலுக்கடியில் பரவிக் கிடக்கிறது. ஆடி, ஆவணி மாதங்களில் வாடைக் காற்று வீசும் காலங்களில் இந்த கரும்பு பாசிகள் அறுபட்டு, நீரோட்டத்தின் வேகம் காரணமாக மிதந்து மீன வர்கள் வலையில் சிக்குவதோடு, கடற் கரையிலும் ஒதுங்கி வருகிறது. இவ்வாறு இரண்டு மாதங்கள் மட்டும் கரும்பு பாசிகள் கரை ஒதுங்கும். இத னால் மீனவர்கள் விரிக்கும் வலையும் சேதமடைகின்றன” என்றார்.