districts

img

செப்.16 திருச்சியில் புத்தகத் திருவிழா: புத்தகச் சுவர் திறப்பு: அமைச்சர்கள் பங்கேற்பு

திருச்சிராப்பள்ளி, செப்.4 - திருச்சியில் புத்தகத் திருவிழா செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் 26  ஆம் தேதி வரை நடைபெற உள்ளதை  முன்னிட்டு அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யா மொழி ஆகியோர்  மாவட்ட ஆட்சியர கத்தில் அமைக்கப்பட்ட புத்தகச் சுவ ரினை ஞாயிறன்று திறந்து வைத்தனர்.  பின்னர் பள்ளி மாணவர்கள், காசு களை சேமித்து புத்தகம் வாங்கும் வித மாக 200-க்கு மேற்பட்ட மாணவர்க ளுக்கு உண்டியல்களை வழங்கியும், புத்தகத் திருவிழா இலச்சினையை வெளியிட்டும், விழிப்புணர்வு ஸ்டிக்கர் கள் ஒட்டப்பட்ட குடிநீர் கேன்களை வழங் கியும், பேருந்துகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டியும் புத்தகத் திருவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தனர். திருச்சி புத்தகத் திருவிழா மத்திய  பேருந்து நிலையம் அருகில் உள்ள  செயின்ட் ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப்  பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.  புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, பொது மக்கள் தாங்கள் வாசித்த நல்ல நூல்க ளையும், நேசிக்கும் புதிய நூல்களை யும், தாமாக முன் வந்து நன்கொடை யாக வழங்கிடும் வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘புத்தகச் சுவர்’ அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சேகரிக்கப்படும் புத்தகங்கள் அனைத்தும் கிராமப்புற நூலகங் களுக்கு வழங்கப்பட உள்ளன. மேலும் திருச்சி மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் இருந்து அனுப்பப்ப டும் கடிதங்கள் அனைத்திலும், புத்த கத் திருவிழாவிற்கான விளம்பரம்  முத்திரையிடப்பட்டு அனுப்பும் நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

;