districts

img

மூத்த தோழர் என்.கோவிந்தராஜ் மறைவு

திருவாரூர், ஜூன் 1- திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் புது தேவங்குடியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஜி.குருமூர்த்தியின் தந்தையும், கட்சியின் மூத்த தோழருமான என்.கோவிந்தராஜ் வயது மூப்பு காரணமாக வெள்ளிக்கிழமை காலமானார்.  அவரது மறைவு செய்தி அறிந்த சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மறைந்த தோழர் என்.கோவிந்தராஜ் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.  மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.சுமதி, விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் பி.அண்ணாதுரை, வாலிபர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் எஸ்.ராஜா மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளை உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.  சனிக்கிழமை இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.