districts

img

சிறந்த பள்ளியாக தேர்வு காரைக்குறிச்சி அரசுப் பள்ளிக்கு ‘காமராஜர் விருது’

அரியலூர், ஜூலை 11-

     அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிரா மத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தமிழ் வழி, ஆங்கில வழி கல்வி பயி லும் வசதி உள்ளது. இங்கு ஒவ்  வொரு ஆண்டும் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பது ஒரு புறம் இருக்க, மறுபுறம் மாண வர்கள் சேர்க்கையும் அதிகரித்து வரு கிறது.

    இப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்  டும் சுமார் 300 மாணவர்கள் சேர்ந்துள்  ளனர். அது மட்டுமின்றி பல்வேறு  அரசுத் துறைகளில் பணியாற்று பவர்களும், தங்கள் குழந்தைகளை இந்த அரசுப் பள்ளியில் சேர்த்துள்ள னர். இந்தாண்டு அரியலூர் மாவட்டத்  தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்  மாணவர்கள் சுமார் 350 பேர் சேர்ந்  துள்ளனர். தற்போது இப்பள்ளி மாண வர்களின் மொத்த எண்ணிக்கை 850-க்கும் மேல் உள்ளது.  

   பள்ளிக்கு விடுமுறையின்றி வரும் மாணவர்கள், சிறந்த மதிப் பெண் எடுக்கும் மாணவர்கள் என  அனைவருக்கும் பரிசுகள், பாராட்டுச்  சான்றிதழ்கள் வழங்கி வருகின்றனர் ஆசிரியர்கள். பள்ளியில் உள்ள 35 ஆசிரியர்களும் பாரபட்சமின்றி ஒற்று மையுடன் பணியாற்றுவதே இந்த  வெற்றிக்கு காரணம் என கூறுகின்ற னர்.

    இந்நிலையில், தமிழக அரசு சார்  பில் ஒவ்வொரு ஆண்டும், மாவட்டத்  திற்கு ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி யை சிறந்த பள்ளியாக தேர்வு செய்து, ‘காமராஜர் விருது’ வழங்கு வது வழக்கம். தற்போது, சென்ற ஆண்டு சிறப்பாக பணியாற்றியதாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள காரைக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இந்த விருது வழங்கப் பட்டுள்ளது.  

    இப்பள்ளியில், உயர்நிலைப் பள்  ளிக்கு தேவையான ஆய்வகங்கள் மட்டுமே உள்ளன. மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தேவை யான ஆய்வகங்கள் இல்லாததால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளா கின்றனர்.

     எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் கட்டிடம்  கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்  டும். மாணவர்களுக்குத் தேவை யான ஆய்வக வசதியை ஏற்படுத்தி  தர வேண்டும். வெளிமாவட்டங்க ளில் இருந்து மாணவர்கள் சேர்க்கை  அதிகரித்து வரும் நிலையில் மாண வர்கள் தங்கும் விடுதியும் அமைத் துத் தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.