கந்தர்வகோட்டை, மார்ச் 27 - புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் விராலிப்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தில் விஞ்ஞான துளிர் வாச கர் திருவிழா நடைபெற்றது. இல்லம் தேடி கல்வி ஒன்றிய ஒருங்கி ணைப்பாளர் ரகமத்துல்லா மாணவர்களுக்கு துளிர் அறிவியல் இதழின் பயன்பாடு குறித்து விளக்கிப் பேசினார். நிகழ்வில் மாணவர்கள் அறிவியல் சோதனைகளை செய்து காண்பித் தும், கதைகள் சொல்லியும், கணிதப் புதிர் களை விளக்கியும் பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். முன்னதாக தன்னார்வலர் சுவேத்ரா வரவேற்க, மகாலட்சுமி நன்றி கூறினார்.