districts

img

மழை வெள்ளத்தில் மிதக்கும் பள்ளிகள்

கனமழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில், மணமேல்குடி, அறந் தாங்கி பகுதிகளில் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. நெற்பயிர்கள் தண்ணீ ருக்குள் மூழ்கி விவசாயிகளை பெரும் சோகத் தில் ஆழ்த்தி வருகிறது. இந்த மழை பள்ளிக் கூடங்களையும் விட்டு வைக்கவில்லை. ஏராளமான பள்ளி வளாகங்களில் மழை நீர்  தேங்கியுள்ளதால் மாணவர்களும், ஆசிரி யர்களும் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். குறிப்பாக ஆவுடையார்கோவில் கண்மாய்,  புண்ணியவயல் கண்மாய், பன்னியூர் கண்மாய் பகுதிகளில் இருந்து நீர் வெளியே றும் பகுதியில் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. பெய்த மழையின்  உபரிநீர், இப்பள்ளியின் அருகேயுள்ள சிறிய வாரியில்தான் செல்ல வேண்டும். தற்பொழுது பெய்துள்ள மழைநீர் வெள்ளக்காடாக இந்த வாரியின் வழியே சென்று கொண்டிருக்கிறது. இதனால், பள்ளி வளாகம் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.  இந்தப் பள்ளியில் 185 மாணவிகள் படித்து  வருகின்றனர். தற்போது அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறுகின்றன. திங்கள்கிழமை  முதல் மீண்டும் தேர்வுகள் நடைபெற வேண்டும். ஆனால், பள்ளிக்கு மாணவிகளோ, ஆசிரி யர்களோ செல்ல முடியாத அளவுக்கு தண்ணீர்  தேங்கியுள்ளது. தண்ணீர் விரைவாக வெளியேறுவதற்கு நடவடிக்கை எடுப்பதோடு, மாணவிகள் தேர்வு  எழுதுவதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவு டையார் கோவில் ஒன்றியக்குழுவும், இந்திய  மாணவர் சங்கத்தின் மாவட்டக் குழுவும் மாவட்ட நிர்வாகத்தையும், பள்ளிக் கல்வித் துறையையும் வலியுறுத்தி உள்ளது.