districts

ரேசன் கடையில் ரூ.18 ஆயிரம் கொள்ளை

தஞ்சாவூர், ஜூலை 7 -

    தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலமாக ரேசன் கடை செயல் பட்டு வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு இந்தக் கடை மூலம் பொருள் விநியோகம் செய்யப்படுகிறது.  

    இந்நிலையில், பணியாளர்கள் வியாழக்கிழமை விற்ப னையை முடித்து விட்டு, ரேசன் கடையை  மூடிச் சென்றுள் ளார். இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை ரேசன் கடை யின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த கிராமத்தினர், வல்லம் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ரேசன் கடை  விற்பனையாளர் உள்ளிட்டோர் வந்து பார்த்தபோது, கடை யில் இருந்த 18 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரிந்தது.  இதுகுறித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செய லாளர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்கு பதிந்து, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம  நபர்களை தேடி வருகின்றனர். இதேபோல் ஆலக்குடியில் உள்ள நான்கு அரசுப் பள்ளிகளின் அலுவலகத்தின் பூட்டை  உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், அங்கு பணம் இல்லாததால் திரும்பிச் சென்றுள்ளனர்.