ஈரோடு, பிப்.13- மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலி யாக உள்ள அலுவலக உதவியாளர் பணியி டங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள் ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங் கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடு பட்டனர். துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத் தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாது காப்பு அரசாணையினை உடனே வெளியிட வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண் டும். சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை ஏற்ப டுத்திட வேண்டும். அரசின் திட்ட பணிகளை செம்மையாக மேற்கொள்ள உரிய கால அவ காசம் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி ஈரோடு வட்டாட்சியர் அலுவலக வளா கத்தில் உண்ணாவிரதம் போராட்டம் நடை பெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் த.ஜெகநாதன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் கு.கும ரேசன் போராட்டத்தைத் தொடங்கி வைத் தார். மாவட்டச் செயலாளர் செ.ரமேஷ் கோரிக் கைகளை விளக்கிப் பேசினார். மேனாள் பொதுச் செயலாளர் க.ராஜ்குமார் சிறப்புரையாற்றி னார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் ச.விஜயமனோகரன், தமிழ்நாடு நில அளவை அலுவலர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கௌரிசங்கர், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க நிர்வாகி மணிபாரதி உள் ளிட்ட பெருந்திரளான வருவாய்த்துறை அலு வலர்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண் டனர். போராட்டத்தின் இறுதியில் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் க.விஜய் நன்றி கூறி னார். நீலகிரி இதேபோன்று, நீலகிரி மாவட்டம், உத கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரத போராட் டத்திற்கு, தமிழ்நாடு வருவாய்த்துறை அலு வலர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தினேஷ் உள்ளிட்ட ஏராளமான வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.