districts

img

திறந்தவெளியில் வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகள்

கும்பகோணம், பிப்.26- திருப்பனந்தாள் அரசு நெல் கொள் முதல் நிலையங்களில் திறந்தவெளி யில் வைக்கப்பட்டு, தேங்கிக் கிடக்கும்  நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டு மென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்  அருகே உள்ள திருப்பனந்தாள் ஒன்றியத் திற்குட்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்க ரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டன. அவற்றை விவசாயிகள் திருப்பனந் தாள் ஒன்றியத்தில் உள்ள 40 அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் விவசாயிகளிடம் கொள் முதல் செய்யப்பட்ட நெல், திருப்பனந் தாள் ஒன்றியத்திற்குட்பட்ட திருவாய் பாடி, சேங்கனூர், சூரியனார்கோயில், வானம்பாடி, மணிக்குடி, முட்டகுடி, கட்டாநகரம் உள்ளிட்ட அரசு நெல் கொள் முதல் நிலையங்களில், திறந்தவெளி யில் எவ்வித பாதுகாப்பும் இன்றி அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதே போன்று கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளும் பாது காப்பின்றி மழையால் வீணானது குறிப் பிடத்தக்கது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஏ.எஸ்.பாரதி தலைமையில், கட்சியி னர் களஆய்வில் ஈடுபட்டனர்.  அப்போது, கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை அரவை மில்லுக்கு,  கிடங்குகளுக்கு அனுப்புவதற்கு அதி காரிகள் பாரபட்சம் காட்டுவதும், கொள் முதல் நிலைய அலுவலர்களை பாதிக் கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்வதற்கு ‘தனி யாக கவனித்தால் மட்டுமே’ அப்பணி நடைபெறுவதும் தெரிய வருகிறது. அரசு கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனே பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும். அங்கி ருந்து மூட்டைகளை ஏற்றிச் செல்ல நட வடிக்கை எடுக்காத உயர் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க  வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி திருப்பனந்தாள் ஒன்றியக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.