திருத்துறைப்பூண்டி, ஆக.13 -
கர்நாடக அரசிடமிருந்து தமிழகத்திற்கு உரிய நீரை பெற்று தர வேண்டும். தண்ணீரின்றி குறுவை பயிர் பாதித்த விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். குறுவை பயிர்களுக்கு காப்பீட்டு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கோட்டூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் - விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிபிஐ தேசிய குழு உறுப்பினர் வை.சிவபுண்ணியம், திருத்துறைப் பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர்.