புதுக்கோட்டை, ஆக.12 -
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை பழங்காலப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.
பழங்காலத்தில் மக்கள் பயன்படுத்திய பல அரியவகைப் பொருட்களை தமுஎகச நகரச் செயலாளர் சு.பீர்முகமது சேகரித்து வைத்திருந்தார். இவர் சேகரித்த பொருட் கள், புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் சனிக்கிழமை காட்சிப்படுத்தப்பட்டன.
இக்கண்காட்சியை பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை யில் பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி தொடங்கி வைத்தார். பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல், மாவட்ட தொல்லியல் கழக நிறுவனர் மணி கண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.