districts

img

வாழ்வாதாரத்தை அழிக்கும் கரையில்லாத உப்பனாறு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி கடலில் கலக்கிற  உப்பனாற்றில் 3 கிலோ மீட்டர் தொலை விற்கு இரு பக்க கரைகளும் இல்லாத தால் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக உப்புநீர் சூழ்ந்தே காணப்படுகிறது.  நிலத்தடி நீர் மட்டம் முற்றிலும் உப்பாக மாறியதால் அன்றாட தண்ணீர் தேவைக்கு கூட பணம் கொடுத்து வாங்கும் அவலநிலை நீடித்துக் கொண்டே இருக்கிறது. இதே நிலை நீடித்தால் அப்பகுதியில் உள்ள பல ஆயிரம் குடியிருப்புகளையும் காலி செய்துவிட்டு வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலைகூட உருவா கும் என அச்சப்படுகின்றனர். காவிரியிலிருந்து பிரிந்து செல்லும்  முக்கிய பாசன கிளை ஆறுகளில் மகி மலையாறும் ஒன்று. பல லட்சம் ஏக்கர் விளைநிலங்களின் பாசன ஆறான மகி மலையாறிலிருந்து தரங்கம்பாடி வட்டம், காழியப்பநல்லூர் கிராமம் கண்ணப்பமூலை என்றழைக்கப்படுகிற பகுதியிலிருந்து பிரிந்து சிறு  பகுதி யான அனந்தமங்கலம் வழியாக குட்டி யாண்டியூர் கடலிலும், மற்றொரு பகுதி ஒழுகைமங்கலம், காத்தான்சாவடி, பொறையார் வழியாக தரங்கம்பாடி பகுதி கடலிலும் கலக்கிறது. சுமார் 3 கிலோ மீட்டர் தொலை விலுள்ள இந்த ஆறுதான் உப்பனாறு என்று அழைக்கப்படுகிறது. அக்டோ பர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மேலெழும்பும் கடல்நீரை இந்த ஆறு  உள்வாங்கிக் கொள்வது இயற்கை யான வழக்கம்.

ஆனால் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஆற்றின் இரு பக்க கரை களும் சேதமடைந்து காலப் போக்கில் முற்றிலும் கரையே இல்லாத ஆறாக மாறிப் போனது.  இதனால் ஆற்றின் கரையையொட்டி உள்ள ஒழுகைமங்கலம், ஒழுகை மேட்டுபாளையம், தஞ்சாவூரான் மேடு,  சோனவன்தோட்டம், கடுதாசிப்பட்டறை, சர்ச் தெரு, தென்றல் நகர், இரயிலடி,  காத்தான்சாவடி, சாத்தங்குடி, விநாய கர்பாளையம், வெளிப்பாளையம், கேசவன்பாளையம், ராமானுஜர் நாயக் கன்பாளையம், காவளமேட்டுத் தெரு, வட்டாட்சியர் அலுவலகம், கடற்கரை சாலை, பழைய ரயில் நிலையம், சமயன் தெரு கழுவன்திட்டு, சிந்தாதிரிப் பேட்டை, விஜிபி நகர், இச்சிலடி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங் களுக்குள் புகுந்துவிடும் உப்புநீர் குடி யிருப்புகளை சுற்றி தேங்கியே காணப் படுகிறது. இதனால் சுகாதாரச் சீர்கேடும், வீடுகளின் உறுதித்தன்மையும் பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆற்றின் கரையை சரிசெய்ய வேண்டிய பொதுப் பணித்துறையும், மக்களை பாதுகாக்க வேண்டிய தரங்கம் பாடி பேரூராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது.  இதுகுறித்து சமூக ஆர்வலரும் பேராசிரியருமான பொறையாரை சேர்ந்த தேவசகாயம் கூறுகையில், அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் வரைதான் முன்பு கடல்நீர் உப்பனாறு வழியாக மேலெழும்பி வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை  மாற்றம் காரணமாக எல்லா மாதங்க ளிலும், கரையில்லாத உப்பனாற்றில் உட்புகும் கடல்நீரால் பொறையார், தரங்கம்பாடியை சுற்றியுள்ள கிராம மக்கள் பெரும் பாதிப்பை ஒவ்வொரு நாளும் சந்தித்து வருகின்றனர். இது மட்டுமின்றி, ஆண்டுதோறும் மழைக்கா லங்களில் ஆற்றில் வரும் மழை நீரும் கிராமங்களை மூழ்கடிக்கிறது. 

டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் இப்பகுதியில் அதிக அளவில்  பரவுவதும், தொடர்ந்து உயிரிழப்பு களும் ஏற்பட்டு வருகிறது. சில ஆண்டு களுக்கு முன்பு தரங்கம்பாடி பகுதியி லும்கூட நல்ல நீராக இருந்த நிலத்தடி நீர், தற்போது முற்றிலும் உப்புநீராகவே இருக்கிறது.  குடிநீர் தேவைக்காக கொள்ளிடம்  கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப் பட்டிருந்தாலும் முறையாக விநியோகிக் ்காத நிலை நீடிக்கிறது. உப்பு நீர் தேங்கி நிற்கும் பகுதிகள் வழியாக செல்லும்  குடிநீர் குழாய்களில் ஆங்காங்கே ஏற்பட் டிருக்கும் உடைப்பு, விரிசல்களின் வழியே உப்புநீர் உள்நுழைந்து குழம்ப லாக குடிநீர் வந்தாலும், அதைத்தான் குடித்தாக வேண்டும் என்ற நிலைக்கு தரங்கம்பாடி, பொறையார் பகுதி மக்கள்  தள்ளப்பட்டுள்ளனர்.  அன்றாட பயன்பாட்டுக்குகூட உப்பு  நீரையே பயன்படுத்த வேண்டியிருப்ப தால், மக்கள் சொல்ல முடியாத துயரத் தில் உள்ளனர். பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்த வசதி உள்ளவர்கள் விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர். ஏழை மக்களோ உப்புநீ ரையே பயன்படுத்த வேண்டிய கட்டா யத்தில் உள்ளனர் என்றார் வேதனை யுடன்.

ஆயிரம் ஏக்கர் நிலங்களை சூழ்ந்த உப்புநீர் 

சுனாமிக்கு முன்பு கிழக்கு கடற் கரைச் சாலையை ஒட்டிய பகுதிகளி லிருந்து பொறையார் வரை உள்ள நிலங் களில் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. சுனாமி பேரழிவுக்கு பிறகு பெரும்பகுதி நிலங்களின் தன்மை உப்பாக மாறியதால் விவசாயம் செய் வதை தற்காலிகமாக விவசாயிகள் கை விட்டிருந்தனர். அதன் பிறகு உப்பனாற்றின் கரை சேதமடைந்து காலப்போக்கில் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆங்காங்கே கரை கள் வலுவிழந்து கரை இல்லாத ஆறாக  மாறியதால் ஆறு எது? கிராமங்கள் எது?  நிலங்கள் எது? என தெரியாமல் போனது.  விவசாயம் முற்றிலும் துடைத்தெரியப் பட்டு விட்டது. ஒவ்வொரு வீடுகளின்  பின்புறமும் முன்பும் வீட்டுத் தோட்டங் கள் இருந்தது. ஆனால் தற்போது  புழக்கத்திற்குகூட கொள்ளைப்புறங் கள் இல்லாமல் போய், எல்லா பகுதியும்  உப்பனாறாக காட்சி அளிக்கிறது.

சீரமைத்துத் தர வேண்டிய பொதுப்  பணித்துறையினரின் பிரிவு அலுவலகம் உப்பனாற்றின் கரையை ஒட்டியே இருந்தும், கண்டுகொள்ளாமல் இருக் கின்றனர். உடனடியாக கரையை பலப்படுத்தி சீரமைப்பதோடு, கடல்நீர் உட்புகாதவாறு தடுப்பு அணையும் கட்ட  வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி. சிம்சன் கோரிக்கை விடுத்துள்ளார். இனி யும் தாமதித்தால் மக்களை திரட்டி வலு வான போராட்டங்களை நடத்திக் கொண்டே இருப்போம் என எச்சரித்து உள்ளார். கரையே இல்லாத உப்பனாறால் அன்றாடம் அவதியுறும் பொறையார், தரங்கம்பாடி மக்களின் கோரிக்கை நிறைவேறுமா? உப்பனாறு கரை உய ருமா?

தடுப்பணை கட்ட வலியுறுத்தல் 

தரங்கம்பாடி, பொறையார் பகுதி யில் செல்லும் உப்பனாற்றில் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு கரைகள் முறை யாக இல்லாததால் கடல் நீரும், ஆற்று  நீரும் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக் குள் உட்புகுந்து கடந்த 15 ஆண்டுகளாக  நிலத்தடி நீரையும், நிலத்தின் தன்மை யையும் பாழ்ப்படுத்தி வருகிறது. இப்பகு தியில் சாகுபடி செய்யப்பட்டு வந்த சுமார்  ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் உப்பு தன்மையாகி தரிசாகிக் கிடக்கிறது. கரையை சீரமைக்க வேண்டிய பொதுப் பணித்துறை கண்டு கொள்ளாத நிலையில் பாதிக்கப்பட்டுள்ள கிராமங் களில் ஒன்றான விநாயகர் பாளையம்,  தஞ்சாவூரான் மேடு, சோனவன்தோட்டம் பகுதிகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடனடியாக உப்ப னாறு கரையை சீரமைத்து பலப்படுத்த வேண்டும். கடல்நீர் உட்புகாதவாறு தடுப்பணையையும் கட்ட வேண்டு மென வலியுறுத்தியுள்ளார். 

தொகுப்பு : 
செ.ஜான்சன், தரங்கம்பாடி

 

;