தஞ்சாவூர், பிப்.21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்.2 முதல் 6 வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி மாநாட்டு நிதியாக ரூபாய் 6 லட்சத்து 38 ஆயிரம் நிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் முன்னிலையில், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் வழங்கப்பட்டது. பிப்.19, 20 ஆகிய தேதிகளில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். அவரிடம், இடைக்கமிட்டிகள் இதர அரங்கங்கள் சார்பில் இத்தொகை வழங்கப்பட்டது. இதில், திருவையாறு ஒன்றியம் சார்பில் ரூ.23 ஆயிரத்து 500, பூதலூர் வடக்கு ஒன்றியம் சார்பில் ரூ.30 ஆயிரம், பூதலூர் தெற்கு ஒன்றியம் சார்பில் ரூ.18 ஆயிரத்து 600, தஞ்சை மாநகரக் குழு சார்பில் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம், தஞ்சை ஒன்றியம் சார்பில் ரூ.20 ஆயிரத்து 140, ஒரத்தநாடு ஒன்றியம் சார்பில் ரூ.21 ஆயிரத்து 800, பட்டுக்கோட்டை ஒன்றியம் சார்பில் ரூ.31 ஆயிரம், மதுக்கூர் ஒன்றியம் சார்பில் ரூ.12 ஆயிரத்து 500, திருவோணம் ஒன்றியம் சார்பில் ரூ.25 ஆயிரம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சார்பில் ரூ.44 ஆயிரத்து 500, பேராவூரணி ஒன்றியம் சார்பில் ரூ.25 ஆயிரம், அம்மாபேட்டை ஒன்றியம் சார்பில் ரூ.26 ஆயிரத்து 500, எல்ஐசி அரங்கம் சார்பில் ரூ.25 ஆயிரம், ஜிஐசி சார்பில் ரூ.10 ஆயிரம், வங்கி அரங்கம் சார்பில் ரூ.10 ஆயிரம், மாவட்டத்தின் இதர பகுதிகள் என மொத்தம் ரூ.6 லட்சத்து 38 ஆயிரம் வழங்கப்பட்டது. நிகழ்வில், மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக் கமிட்டி செயலாளர்கள், இதர அரங்கங்களின் நிர்வாகிகள், ஒன்றியக்குழு, நகரக் குழு உறுப்பினர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர். கும்பகோணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு ஏப்ரல் மாதம் மதுரையில் நடைபெறுவதையொட்டி, கட்சியின் தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியக்குழு சார்பில் 24 வது அகில இந்திய மாநாடு நிதியாக ரூ.50,000 ஐ மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் வழங்கினர். நிகழ்வின்போது, தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜீவபாரதி, நாகேந்திரன், ஒன்றியச் செயலாளர் சங்கர், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சேகர், ஜவகர்லால், அம்சவல்லி, மூத்த தோழர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.