districts

img

தனியார் அறக்கட்டளை சார்பில் மருத்துவப் பொருட்கள் வழங்கல்

தஞ்சாவூர், ஜன.20- தனது வாழ்நாள் முழுவதும் ஏழை, எளிய மக்க ளுக்காக மருத்துவ சேவை செய்து, 2 ரூபாய் டாக்டர்  என புகழ்பெற்ற மறைந்த தஞ்சை டாக்டர் கே.வேலுச் சாமி நினைவாக உருவாக்கப்பட்டுள்ள, டாக்டர் கே. வேலுச்சாமி மெடிக்கல் பவுண்டேஷன் சார்பில், தஞ்சை புறநகர் மற்றும் கிராமப்புற அரசுப் பள்ளிகளுக்கு இலவசமாக முகக் கவசங்கள், சானிடைசர் மற்றும் சானிடரி நாப்கின், அடிப்படை மருத்துவ உபகரணங் கள் ஆகியவற்றை, பவுண்டேஷன் நிறுவனர் இளைய ராஜா வேலுச்சாமி தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் புதனன்று வழங்கினார்.  இவை தஞ்சாவூர் அண்ணாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி, அரண்மனை வளாகம் அரசு மேல்நிலைப் பள்ளி, மருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி, அய்யம் பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவி கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.