districts

img

பொறையார் அரசு மருத்துவமனைக்கு ஐசியூ, ஏர் படுக்கை வழங்கல்

மயிலாடுதுறை, மே 17- மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அரசு மருத்துவமனைக்கு சமூக நல அறக் கட்டளையின் சார்பில் ஐசியூ பெட் மற்றும் ஏர்  பெட் ஆகியவை வழங்கப்பட்டன. அறக்கட்ட ளையின் அறங்காவலரும், சமூக செயற்பாட் டாளருமான ஆயப்பாடி முஜிபுர்ரஹ்மான், சமூக நல அறக்கட்டளை துணைச் செய லாளர் பெரியக்கூத்தூர் அமீன் ஆகி யோர் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான ஐசியூ பெட், ஏர் பெட் ஆகிய வற்றை வழங்கினர். இதைப் பெற்றுக் கொண்ட அரசு மருத்து வர் டீனா சிவானி, செவி லிய கண்காணிப்பாளர் லில்லி ஆகியோர் அறக்கட்டளையின ருக்கு நன்றி தெரி வித்தனர். மேலும் மருத்துவமனைக்கு வருபவர்கள்  அமரும் இருக்கைகள், அக்வா குடிநீர் உள்ளிட்டவை உடனடி தேவையாக இருப்ப தால், சமூக நல அறக்கட்டளை சார்பில்  விரைவில் வாங்கித் தருவதாக உறுதியளித்த  னர்.

;