திருச்சிராப்பள்ளி, செப்.27 - தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்த விவசாயத் தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்தும், சுழற்சி முறையில் வேலைக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்கம் சார்பில் திருச்சி மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாபெரும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கிளைச் செய லாளர் சாந்தி தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி சங்க மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி யன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஏ.கனகராஜ், கிழக்கு ஒன்றியச் செயலாளர் சக்தி வேல் ஆகியோர் பேசினர். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.சந்திரன் நிறை வுரையாற்றினார். பின்னர் நடந்த பேச்சு வார்த்தையில், அனைவருக்கும் உடனடியாக கூலி வழங்குவது, வேலை வழங்குவது என முடிவு செய் யப்பட்டது. இதனையடுத்து அனை வரும் கலைந்து சென்றனர். தஞ்சாவூர்: நூதனப் போராட்டம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், விவசாய தொழிலா ளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவல கம் முன்பு சமையல் செய்யும் நூத னப் போராட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது. போராட்டத்திற்கு மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.தமிழ்ச் செல்வி தலைமை வகித்தார். தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சி. பாஸ்கர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டோர் பூதலூர் நான்கு ரோட்டில் இருந்து, வாயில் கருப்புத் துணி கட்டி, மண்சட்டி மற்றும் அடுப்பை கையில் ஏந்தி ஊர்வல மாகச் சென்று வட்டார வளர்ச்சி அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி னர். இதையடுத்து ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் கல்லணை செல்லக் கண்ணு, வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் ராஜா, பொற்செல்வி ஆகி யோர் போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகி களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ஒரு வாரத்தில் நிலு வையில் உள்ள நூறு நாள் வேலை சம்பளம் வழங்கப்படும்’ என உத்தர வாதம் அளித்தனர். பின்னர் போராட் டம் கைவிடப்பட்டது.