மயிலாடுதுறை, செப்.11- பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட பொறுப் பாளருமான நிவேதா எம்.முருகனின் பிறந்தநாளையொட்டி தரங்கம்பாடி பேரூராட்சியின் 6 ஆவது வார்டு கவுன்சிலர் செந்தாமரைச்செல்வி ரமேஷ் சனிக்கிழமையன்று மயிலாடு துறை மாவட்டம், தரங்கம்பாடியில் கிருபாலயம் மனவளர்ச்சி குன்றியோர் காப்பகப்பள்ளியில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கினார். பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி குமரவேல் குழந்தைகளுக்கு உணவு பரிமாறி சட்டமன்ற உறுப்பினரின் பிறந்த நாளைக் கொண்டாடினர். பேரூ ராட்சி துணைத்தலைவர் பொன். இராஜேந்திரன், திமுக பிரமுகர் களான சாத்ராக், அர்ஜூனன், குமார், சடகோபன் உள்ளிட்டோர் உடனிருந்த னர்.