districts

img

100 நாள் வேலை கேட்டு விவசாயத் தொழிலாளர்கள் மனு

திருச்சிராப்பள்ளி,மே,14- 100 நாள் வேலைத்திட் டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் 2005 இன் கீழ் கடந்த 2023-2024 மற்றும்  2024-2025 வரை கடந்த 8 மாதங்களாக  சரியாக வேலை வழங்கப் படவில்லை. வேலைக்கான கூலியும் உடனடியாக வழங்கப்படவில்லை. 2024-2025-க்கான வேலை என்பதும் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. இதனை மட்டுமே நம்பி வாழும் மாற்றுத்திறனாளிகள், ஏழை விவசாயிகள், விவசாயக் கூலி தொழிலாளர்கள், ஆதரவற்ற முதியோர் ஆகியோர் பலர் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான உணவு, மருத்துவ செலவுகளுக்குக்கூட வழியில்லாமல் தவிக்கும் நிலை உள்ளது. எனவே  இந்நிதியாண்டிற்கான (2024-2025) 100நாள் வேலையினை அனைத்து ஊராட்சிகளிலும் உடனே வழங்கக்கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருச்சியில் கிராம ஊராட்சி வாரியாக விவசாயத் தொழிலாளர்களிடம் கையெ ழுத்து இயக்கம் நடத்தி கோரிக்கை மனுவை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலரிடம் செவ்வாயன்று வழங்கப்பட்டது.  திருவெறும்பூரில் விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் தெய்வநீதி தலைமையில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, மகாலிங்கம், மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய செயலாளர் சித்ரா ஆகியோர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். துறையூர் ஒன்றியம் உப்பிலியபுரத்தில் சங்க ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமையில் ஒன்றிய பொருளாளர் மங்கள்ராஜ் மற்றும் பலர் வட்டார வளர்ச்சி அலுவல ரிடம் கோரிக்கை  மனு கொடுத்தனர்.  துறையூரில் சங்க ஒன்றிய செயலாளர் ராஜேஷ்; தலைமையில் மாவட்ட துணைச்செயலாளர் முத்துக்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் சுசிலா ஆகியோர் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் கோகிலாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

;