districts

img

100 நாள் வேலை வழங்கக்கோரி மனு கொடுக்கும் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, டிச,15, திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றி யத்திற்குட்பட்ட பெரியசூரியூரில் 100 நாள் வேலை வழங்கக்கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக்குழு ராம மூர்த்தி தலைமை வகித்தார். நிர்வாகிகள் சுப்பிரமணியன், தெய்வநீதி, கனேசன்,  மகா லிங்கம், முத்துகுமார், பிரபாகரன்,  பிள வேந்திரன் ஆகியோர் பேசினர். பின்னர் கோரிக்கை மனுக்களை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்தனர்.