districts

img

அரசு மருத்துவமனை அருகே கொட்டப்படும் குப்பைகளால் மக்கள் அவதி

தஞ்சாவூர், மே 15-  தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை அருகில் உள்ள பழைய  பேருந்து நிலையத்தில் கொட்டிக் கிடக்கும்  குப்பைக் கழிவு துர்நாற்றத்தால் நோயாளி கள், பொதுமக்கள் அவதியடைந்து வரு கின்றனர்.  பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள பழைய பேருந்து நிலைய  கட்டிடங்கள் செயல்படாத நிலையில், இடிந்து மிகவும் மோசமாக உள்ளன. நகரப்  பகுதியில் அள்ளப்படும் குப்பைக் கழிவு களை இங்கு வந்து கொட்டுவதால், மிக அரு கிலேயே உள்ள அரசு மருத்துவமனையின் அண்ணா வார்டில் தங்கி இருக்கும் நோயா ளிகள் குப்பைக் கழிவு களின் துர்நாற்றத்திற்கு மத்தியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மேலும் இரவு நேரங்களில்  மது பிரியர்கள் மது அருந்தி விட்டு, மது பாட்டில்களை அங்கேயே வீசிவிட்டுச் செல் கின்றனர். அந்தப் பகுதியில் இரவு நேரங்களில் குப்பைக்  கழிவுகள், நெகிழி கழிவுகள் தீயிட்டு கொளுத் தப்படுவதால், நுரையீரல் பாதிக்கப்பட்டு  நோயாளிகள், மருத்துவர்கள் மூச்சுவிட முடி யாமல் தவித்து வருகின்றனர். மேலும், நோயா ளிகளுக்கு கண் எரிச்சல் ஏற்படுகிறது.  எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக அங்கு உள்ள குப்பைகளை அகற்றி, அந்த  இடத்தை சுத்தம் செய்யவும், மிகவும் மோச மான நிலையில் உள்ள பழைய பேருந்து  நிலையக் கட்டிடங்களை இடித்து அப்புறப் படுத்தவும் வேண்டும். அந்த இடத்தில் சுகா தாரத்தை பேண வேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.