districts

திருச்சி முக்கிய செய்திகள்

ஓய்வூதியர்கள் கையெழுத்து இயக்கம்

கும்பகோணம் அக்.11-  தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க வட்ட சிறப்பு கூட்டம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. அதில் ஓய்வூதியர்களின் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லட்சம் கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது. கூட்டத்திற்கு வட்டத் தலைவர் துரை ராஜ் தலைமை வகித்தார். மாநில செயற்குழு  உறுப்பினர் ராஜகோபாலன், மாவட்டச் செய லாளர் ஆர்.தமிழ்மணி ஆகியோர் பேசினர். ஓய்வூதியர்களுக்கான தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற ஐந்து அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக முழு வதும் நடைபெறும் ஒரு லட்சம் கையெழுத்து இயக்கத்தை கும்பகோணத்தில் துவக்கி வைத்து, மாநில பொதுச் செயலாளர் பி. கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார்.

அக்.24 தஞ்சை பெரியகோயிலில் சதய விழா  பந்தல் கால் நடும் நிகழ்ச்சி

தஞ்சாவூர், அக்.11-  தஞ்சாவூர் பெரியகோயிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1038 ஆவது சதய விழா அக்டோபர் 24 அன்று தொடங்கப்படவுள்ளதை முன்னிட்டு, பந்தல் கால்  நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பார் போற்றும் புகழுடைய இந்தப் பெரியகோயி லைக் கட்டித் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள், அவர் பிறந்த  விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழா வாகக் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 ஆவது சதய விழா அக்.24 அன்று தொடங்குகிறது. சதய  நட்சத்திர நாளான 25 ஆம் தேதி ராஜராஜசோழன் சிலைக்கு  மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. கடந்த  ஆண்டு தமிழக அரசு அறிவித்தபடி, இவ்விழா அரசு விழா வாக நடைபெற உள்ளது. இந்த இரு நாள் விழாவில் பட்டிமன்றம், நாட்டிய நாடகம், திருமுறை அரங்கம், கருத்தரங்கம், கவிய ரங்கம், நாட்டிய நிகழ்ச்சி உள்ளிட்ட கலை நிகழ்ச்சி களும், பெருவுடையார், பெரியநாயகிக்கு சிறப்பு பூஜை களும் நடைபெறவுள்ளன. இதையொட்டி, பெரியகோ யிலில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடை பெற்றது. நிகழ்ச்சியில், சதய விழாக் குழுத் தலைவர் து.செல்வம், துணைத் தலைவர் எஸ்.சி.மேத்தா உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.

ஆலக்குடியில் படத்திறப்பு நிகழ்வு

தஞ்சாவூர், அக்.11 -  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட முன்னாள் செயலாளரும், விவசாயிகள் சங்க  தஞ்சை ஒன்றியச் செயலாளரும், சிபிஎம் தஞ்சை ஒன்றியக் குழு உறுப்பினருமான தோழர் எஸ்.கோவிந்தராசுவின் மகன் ஜி.அருண்குமார் அண்மையில் உயிரிழந்தார். அவரது படத்திறப்பு தஞ்சை ஒன்றியம், ஆலக்குடி யில் புதன்கிழமை நடைபெற்றது. சிபிஎம் ஒன்றியச் செய லாளர் கே.அபிமன்னன் தலைமை வகித்தார். தமிழ்நாடு  அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி படத்தை திறந்து  வைத்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ. நீலமேகம், ஆர்.மனோகரன் புகழஞ்சலி உரையாற்றினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி. செந்தில்குமார், மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சமயபுரம் கோவிலில் புரோக்கர்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டுகோள்

திருச்சிராப்பள்ளி, அக்.11 - தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு துணைத்தலைவர் ராஜப்பா தலைமை வகித்தார். தமிழ்நாடு அடி மனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்டச் செயலாளர் முரு கேசன், மாவட்டத் தலைவர்  அழகு, தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலை வர் சிதம்பரம், மாவட்டச் செயலாளர் நடராஜன்,  கே.சி.பாண்டியன் ஆகியோர் பேசினர். சமயபுரம் கோவிலில் இடைத்தரகர்கள் (புரோக்கர்கள்) தொல்லையை கட்டுப் படுத்த வேண்டும். வெகு தொலைவிலிருந்து சமயபுரம் கோவிலுக்கு நடைபயணமாக வரும் பக்தர்கள் நெடுஞ்சாலை வழியாக வருவதால், சாலையில் எதிர்பாராமல் விபத்து  நிகழ்ந்து உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சாலையின் இருபுறமும் நடை பாதை அமைத்து கொடுத்து விபத்தை தவிர்க்க வேண்டும். சமயபுரம் கோவிலில் முதலுதவி சிகிச்சை மையம் அமைக்க வேண்டும். கோவிலில் பக்தர்களுக்கு சுகாதார மான குடிநீர், கழிப்பிட வசதி செய்து தர  வேண்டும். அக்.16 அன்று திருவானைக்கா வலில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு  நடைபெற உள்ள போராட்டத்தில் ஏராளமா னோர் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட பொருளாளர் குருநாதன் நன்றி கூறி னார்.

சம்பா நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

புதுக்கோட்டை, அக்.11- புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சம்பா நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என  மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார். பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு ஆண்டிற்கு சம்பா நெற்பயிருக்கு ஏக்கருக்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.34,200 கடன் தொகையில், விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியத் தொகை 1.5 சதவீதம் மட்டுமே. அதன்படி ஏக்கருக்கு ரூ.513 காப்பீட்டு கட்டணமாக விவசாயிகள் செலுத்தினால் போதுமானது.   இந்த திட்டத்தில் பயிர் கடன் பெறும் விவசாயிகள் அனைவரும், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையங்கள் மூலமாகவோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். நடப்பு சம்பா பருவத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் நவம்பர் 15 ஆகும். எனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தையோ, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம்.

மணமேல்குடி கடலோரப் பகுதிகளில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை

அறந்தாங்கி, அக்.11- புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கிழக்கு கடற்கரை பகுதி களில் சாகர் கவாச் என்ற தீவிரவாத தடுப்பு ஒத்திகை நடந்தது. இந்த  ஒத்திகையை மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர்  முத்துக்கண்ணு தலைமையில் போலீசார், ஊர்காவல் படையினர் இணைந்து மேற்கொண்டனர். பின்னர், மணமேல்குடி, கோடியக்கரை,  கோட்டைப்பட்டினம், புதுக்குடி, பொன்னகரம், அந்தோணியார்புரம், வடக்கம்மாபட்டினம், மேலஸ்தானம் ஆகிய பகுதிகளில் ரோந்து சென்று, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.