districts

img

தனியார் கைகளில் கொடுக்கும் அரசாணைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும்

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை ஒழித்து, தனியார் கைகளில் கொடுக்கும் அரசாணைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தின் (சிஐடியு) கரூர் மாவட்டக்குழு சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். சிஐடியு மாநில துணை தலைவர் ஆர்.சிங்காரவேலு சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் உள்ளிட்டோர் பேசினர்.