districts

திருச்சி முக்கிய செய்திகள்

மருத்துவ ஆலோசனை கூட்டம் 

திருச்சிராப்பள்ளி, ஜூன் 1- மதுரை மண்டல பொது  இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர் சங்கம் மற்றும்  திருச்சி காவேரி மருத்து வமனை இணைந்து நடத் தும் மருத்துவ ஆலோ சனை கூட்டம் சனிக் கிழமை காவிரி மருத்துவ மனை கூட்டரங்கில் நடை பெற்றது.  கூட்டத்திற்கு திருச்சி ஜி.ஐ.பி.ஏ உதவி தலைவர் மணிவேல் தலைமை வகித் தார். இருதய மின் உடலி யங்கியல் நிபுணர் டாக்டர் ஜோஸப், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜோஸ் ஜாஸ்பர் மற்றும் உணவியல் துறை நிபுணர்கள் ஆலோசனை வழங்கினர்.  ஜி.ஐ.பி.ஏ மதுரை தலைவர் கோபால் ராஜ், திருச்சி எம்.ஆர்.ஜி.ஐ.இ.ஏ இணைச் செயலாளர் முத்துக்குமரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக திருச்சி ஜி.ஐ.பி.ஏ இணை செயலா ளர் ராஜ மகேந்திரன் வர வேற்றார். திருச்சி ஜி.ஐ.பி.ஏ இணைச் செயலாளர் ஜெய ராமன் நன்றி கூறினார்.

1,150 கிலோ ரேசன் அரிசி பதுக்கல்: ஒருவர் கைது

தஞ்சாவூர், ஜூன் 1-  தஞ்சாவூர் வடக்கு அலங்கம் பகுதியில், பொது  விநியோகத் திட்ட அரிசி  பதுக்கி வைக்கப்பட்டுள்ள தாகக் காவல் துறையி னருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், உணவுப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் துணைக் கண்காணிப்பா ளர் சரவணன், ஆய்வாளர் முருகானந்தம், உதவி ஆய்வாளர் பிரசன்னா உள்ளிட்டோர் வடக்கு அலங்கம் பகுதியிலுள்ள வீட்டில் வெள்ளிக்கிழமை சோதனையிட்டனர். அப்போது, 50 கிலோ எடை கொண்ட 23  மூட்டைகளில் 1,150 கிலோ பொது விநியோகத் திட்ட  அரிசி பதுக்கி வைக்கப்பட்டி ருப்பது தெரிய வந்தது.  கரந்தை, பள்ளியக்ர ஹாரம், கீழவாசல் ஆகிய  பகுதிகளில், மக்களிட மிருந்து அரிசியைக் குறைந்த விலைக்கு வாங்கி இட்லி மாவு அரைப்பதற்கும், மீன் பண் ணைக்கும் அதிக விலை யில் விற்கப்படுவது தெரிய  வந்தது. இது தொடர்பாக வடக்கு  அலங்கத்தைச் சேர்ந்த எம்.ராஜேந்திரனை (48) காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவில் குளத்தை  சீரமைக்க கோரிக்கை

பாபநாசம், ஜுன் 1 - கும்பகோணம் - தஞ்சா வூர் மெயின் சாலையில் பாபநாசத்தில் 108 சிவா லயம் அமைந்துள்ளது. ‘கீழை ராமேஸ்வரம்’ என்றும், அருள்மிகு இரா மலிங்க சுவாமி திருக்கோ யில் என்றும் அழைக்கப்ப டும் இந்த ஆலயத்தில் 108 சிவலிங்கங்கள் உள்ளன. இத்தலம் இந்து சமய அற நிலையத் துறையின் கட்டுப் பாட்டில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், வெளி மாநிலங் களில் இருந்து ஏராள மான பக்தர்கள் தரிசனத்திற் காக வந்து செல்கின்றனர். இந்த ஆலயத்தின் குளமா னது தண்ணீரின்றி வறண்டு கிடப்பதுடன், குளத்தின் ஒரு பக்கச் சுற்றுச்சுவர் இல்லை.  எனவே, இந்து சமய அறநிலையத் துறை உரிய கவனம் செலுத்தி குளத் தின் படித்துறையை பரா மரிப்பதுடன், புதிதாக காம்ப வுண்ட் சுவர் அமைத்து, குளத்தை தூர்வாரி நீர் நிரப்ப வேண்டுமென கோ ரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

கடனை திருப்பி கொடுக்காததால் இளம்பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ பதிவு  5  பேர் மீது வழக்கு

தேனி, ஜூன் 1-  தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை பகுதியைச் சேர்ந்த ஒருவர் மணி என்பவரிடம் கடன் பெற்றார். இதில் அவர் பணம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படு கிறது.   தென்கரையை சேர்ந்தவரின் 19 வயதுள்ள மகள் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி  வருகிறார். பணம் கொடுக்க முடியாத நிலையில் எட்டு மாதங்களுக்கு முன்பு அவரின் மகளை பணம் கொடுத்த மணி என்பவர் தூண்டுதலின் பேரில் பெரியகுளம்  தென்கரை யைச் சேர்ந்த பழனி, நவநீத், சுரேஷ், ஹரி ஆகிய நான்கு  பேரும்சேர்ந்து காரில் கடத்திச் சென்றனர்.  காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து செல்போ னில் படம் பிடித்ததாகவும் அதை வெளியில் தெரிவித்தால்  வலைதளங்களில் போட்டு விடுவதாகவும் மிரட்டியதாக  பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். இதன் புகாரின் அடிப்படையில்  அந்த 5 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இளம் பெண் கொடுத்த புகாரில் சம்பந்தப்பட்ட  ஐந்து நபர்களும் பெரியகுளம் அனைத்து மகளிர் காவல்  நிலையத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக காவல் துறையினர் உத்தரவிட்டனர்.

சிவகங்கை கிளாதரி பண்ணையில்  க்யூ ஆர் கோடு மூலம்  மரங்களைப் பற்றி அறியலாம் தோட்டகலை-மலைப்பயிர்கள் துறை நடவடிக்கை

சிவகங்கை, ஜூன் 1- சிவகங்கை மாவட்டம்   பூவந்தி அருகே கிளாதரியில் கடந்த 2020 ஆம் ஆண்டில் 34 ஏக்கர் பரப்பளவில் தோட்ட கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் அரசு தோட்டக்கலைப்பண்ணை தொடங்கப்பட்டது.   இங்கு மா, வேம்பு, புளி, கொய்யா உள்ளிட்ட பல்வேறு பழமர வகைகளும், மல்லி, பாரிஜாதம், கனகாம்பரம், ரோஜா உள்ளிட்ட பூச்செடி வகை கன்றுகளும் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் முதன் முதலாக கிளா தரி பழப்பண்ணையில் வளர்க்கப்படும் மரங்களுக்கு க்யூ ஆர்  கோடு வழங்கப்பட்டுள்ளது.  பண்ணைகளுக்கு மரகன்றுகள் வாங்க வருபவர்கள்   க்யூ  ஆர் கோடுகளை அலைபேசி மூலம் ஸ்கேன் செய்யும் போது  மரங்களின் பெயர்கள், தாவரவியல் பெயர், மரங்கள் பூக்கும்  மாதங்கள், காய்கள் பிடிக்கும் மாதங்கள், அவற்றை பராமரிக்கும் முறை உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் தெரியவரும், இதன் மூலம் மரங்களை பற்றி அனைத்தும் அறிந்து கொண்டு மரக்கன்றுகள் வாங்கி செல்கின்றனர்.  கிளாதரி பழப்பண்ணைக்கு வருகை தரும் பள்ளி , கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு இந்த க்யூ ஆர் கோடு  வசதி  மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அரசு தோட்டக் கலைத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய ஏற்பாடு

கும்பகோணம், ஜூன் 1- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்  புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பகுதியில் மட்டும் 5 டாஸ்மாக்  கடைகள் செயல்பட்டு வருகின்றன. இத னால் இந்த கடைகளின் அருகே மதுப் பிரியர்களின் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. மேலும் அவர்கள் மது  போதையில் சாலையில் நின்று கொண்டு தகராறில் ஈடுபடுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படு கிறது. கும்பகோணம் புதிய பேருந்து நிலை யத்திற்கு கல்லூரி மாணவிகள் அதி களவில் வருகின்றனர். மது பிரியர்க ளின் செயல்களால், பேருந்து நிலை யத்திற்குள் வருவதற்கு மாணவிகள் அச்சப்பட்டு, பேருந்துகள் வெளியே செல்லும் பாதையில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் நின்று ஏறுகின்றனர். இதனால், கும்பகோணம் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண் டும் என்று கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனிடம் பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து எம்எல்ஏ அன்பழகன் கூறுகையில், “கும்பகோணம் புதிய  பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ் மாக் கடைகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இத னால் கும்பகோணத்திற்கு வரும் வெளி யூர் பயணிகளின் பாதுகாப்பை உறுதி  செய்வதோடு, பேருந்து நிலைய வளா கத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று  மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் தெரிவித்துள்ளேன்.  அதற்கு அவர், நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்தவு டன் கும்பகோணம் வருவாய் கோட்டாட் சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அதிகாரிகள், பொதுமக்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என தெரி வித்துள்ளார்” என்றார்.

கணக்கெடுக்க சென்ற மின் கணக்கீட்டாளர் மீது தாக்குதல்
நடவடிக்கை எடுக்காத போலீசார்; அதிருப்தியில் மின் ஊழியர்கள்

தஞ்சாவூர், ஜூன் 1-  மின் கணக்கீடு செய்யச் சென்ற,  மின் கணக்கீட்டாளரை வீட்டு உரிமையா ளர் அடித்து உதைத்ததில், பலத்த  காயங்களுடன் மின் ஊழியர் பட்டுக் கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்கிய வர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படா ததால் மின் ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ரெகுநாயகிபுரம் கிராமத் தில் மின்வாரிய ஊழியர் அய்யப்பன் (28) கடந்த 3 தினங்களுக்கு முன், மின்  கணக்கீடு செய்வதற்காக சென்று உள்ளார். அப்போது அய்யாசாமி என்பவரின் வீட்டில் மின் அளவீடு செய்து,  ரூ.560 பணம் கட்ட வேண்டும் என்ற தகவலை, வீட்டின் உரிமையாளர் அய்யாசாமியிடம் கூறியுள்ளார்.  அப்போது அய்யப்பன் மின் கட்டணத்  தொகையை கூடுதலாக சொல்வதாகக் கூறிய அய்யாசாமி, “நீ கணக்கை தவறாக குறிப்பிட்டுள்ளாய். சரியாக சொல்லிவிட்டு போ” என்று மின் ஊழியர்  அய்யப்பனிடம் தகராறு செய்துள்ளார்.  அதற்கு, “உங்களுக்கு ஏதேனும் சந்தே கம் இருந்தால் மின்வாரிய அலுவல கத்திற்கு சென்று தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்” என மின் ஊழியர் அய்யப்பன் கூறியுள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த அய்யா சாமி, அய்யப்பனை தகாத வார்த்தை களால் திட்டியதோடு, அய்யாசாமியும் அவரது உறவினர்களும் சேர்ந்து அய்யப்பனின் சட்டையை கிழித்து செங்கல்லால் அடித்ததாக கூறப்படு கிறது.  இந்நிலையில் மின் ஊழியர் அய்யப்பன் பலத்த காயமடைந்த நிலை யில், பட்டுக்கோட்டை அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகிறார். இது பற்றி  அய்யப்பன் சேதுபாவாசத்திரம் காவல்  நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் மின் ஊழியரை தாக்கிய வீட்டு உரிமையாளர் அய்யா சாமி மீது, காவல் துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து அய்யாசாமி தலைமறைவாக இருந்து வருகிறார். காவல்துறை நடவடிக்கை எடுக்காததால், மின் ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும், வேலை நிறுத்தம் செய்யவும் தயாராகி  வருவதாக கூறப்படுகிறது.

;