districts

திருச்சி முக்கிய செய்திகள்

எண்ணும் எழுத்தும்  திட்டமிடல் கூட்டம்

அறந்தாங்கி,  ஜூன் 21- புதுக்கோட்டை மாவட் டம் மணமேல்குடி வட்டார  வளமையத்தில் எண் ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான 1, 2 மற்றும் 3 ஆம் வகுப்பு முன் திட்டமிடல், கற்றல் -கற்பித்தல் உபகர ணங்கள் தயாரிக்கும் பணிமனை கூட்டம், தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடத்திற்கு முன் திட்டமிடல் கூட்டம் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழி யன் தலைமை நடை பெற்றது. மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் அமுதா மற்றும் வட்டார  வளமையை மேற்பார் வையாளர் (பொ) சிவ யோகம் ஆகியோர் முன் னிலை வகித்தனர். இதில் ஒவ்வொரு பாடத்திற்கும் கருத்தாளர்கள் பங் கேற்று, இணையவழி கூடுகை குறித்த அட்டை கள் தயாரித்தல், வெற்றி கதைகள் குறித்த படங்கள்  தயாரித்தல், புத்தகக்  கருத்துறை சார்ந்த  படங்கள் தயாரித்தல், மதிப்பீட்டு சொற்களஞ்சி யம், மின் அட்டைகள் தயாரித்தல், ஆங்கிலப் பாடத்திற்கு கதை கூறுத லுக்கு சொல் அட்டைகள்  தயாரித்தல் மற்றும்  முகமூடி தயாரித்தல் போன்ற கற்றல் உப கரணப் பொருட்களை தயாரித்தனர்.

தரங்கம்பாடியில்  ஜமாபந்தி

மயிலாடுதுறை, ஜூன் 21- மயிலாடுதுறை மாவட் டம் தரங்கம்பாடி வட்டாட் சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம்  நடை பெற்றது. சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் உ.அர்ச் சனா  தலைமையில் நடை பெற்ற முகாமில் தரங்கம் பாடி வட்டத்துக்குட்பட்ட தில்லையாடி, திருக்க டையூர், பிள்ளைபெரு மாள் நல்லூர், மாணிக்க பங்கு, சாத்தங்குடி, எருக் கட்டாஞ்சேரி, காழியப் பன்நல்லூர், தி.மணல் மேடு, இலுப்பூர், உத்தி ரங்குடி ஆகிய வரு வாய் கிராமங்களின் கணக்குகள் சரிபார்க்கப் பட்டன. பல்வேறு கோ ரிக்கை தொடர்பான மனுக் களை பொது மக்கள் வழங்கினர். தரங்கம்பாடி வட்டாட்சியர் மகேஷ், மண்டல துணை வட்டாட் சியர் சக்திவேல், தலை மையிடத்து தனி வட்டாட் சியர் பழனியப்பன் உள்ளிட்ட கிராம நிர்வாக  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூடுதல் விலைக்கு ரயில் டிக்கெட் விற்றவர் கைது

திருச்சிராப்பள்ளி, ஜூன் 21- திருச்சி தென்னூர் பகுதியில் கணினி மையம் நடத்தி வரும் ஒரு வர், பர்சனல் ஐ.டிகளை  பயன்படுத்தி ரயில்வே யில் டிக்கெட் புக்கிங் செய்து, அதனை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. தகவலறிந்த திருச்சி ஜங்சன் ரயில்வே  பாதுகாப்பு படை போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து, அவரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது ரூ.10 ஆயிரம்  மதிப்பிலான காலாவதி யான 11 டிக்கெட்டுகள் அவரிடம் இருந்தன. அதைத் தொடர்ந்து பாது காப்பு படையினர் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.

பட்டுக்கோட்டையில் 150 லிட்டர் ஊறல் சாராயம் அழிப்பு

தஞ்சாவூர், ஜூன் 21-  தஞ்சாவூர் மாவட்டம், மதுவிலக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகதாசன் உத்தரவின் பேரில், பட்டுக் கோட்டை மதுவிலக்கு ஆய்வாளர் ஜெயா தலைமையில் காவ லர்கள் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர். பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டி, தம்பிக்கோட்டை  மேலக்காடு, தம்பிக்கோட்டை வடகாடு மற்றும் தம்பிக் கோட்டை சின்னாத்தங்காடு உள்ளிட்ட பகுதிகளில் பட்டுக் கோட்டை மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ஜெயா தலைமை யில், தலைமை காவலர் மற்றும் காவலர்கள் கள்ளக்குறிச்சி  சம்பவத்தின் எதிரொலியாக அதிரடியாக ஆய்வில் ஈடுபட்ட னர். வெள்ளிக்கிழமை பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக் கோட்டை சின்னத்தங்காடு பகுதியில் ஆய்வில் ஈடுபட்ட பொழுது, ஐந்து பேரல்களில், 150 லிட்டர் ஊறல் சாராயம்,  அதாவது கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கு முந்தைய படிநிலை யில் மூலப் பொருள்கள் கலந்த கலவையான ஊரல் சாராயம்  கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.   அந்த சாராய உற்பத்தியில் ஈடுபட்ட தம்பிக்கோட்டை சின்னாத்தங்காடு பகுதியை சேர்ந்த நாகராஜ் (78), கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அவருக்கு உடந் தையாக இருந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட மற்ற நபர்களை  மதுவிலக்கு அமல் பிரிவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதேபோல் பட்டுக்கோட்டை அருகே சாராயம் காய்ச்சு வதில் ஈடுபடும் கிராமங்களில் தீவிர சோதனையில் நடத்தப்படு கிறது. முன்னாள் மற்றும் இந்நாள் சாராயம் காய்ச்சும் பழக்கம்  உள்ள  குற்றவாளிகளையும் தேடிப் பிடித்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

குடிநீர் வழங்காததைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம்

புதுக்கோட்டை, ஜூன் 21 - புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கடந்த சில நாட்களாக குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளது  அரையப்பட்டி கிராமம். இக்கிராமத்தில் உள்ள ஆதிதிரா விடர் குடியிருப்புக்கு கடந்த 5 நாட்களாக குடிநீர் வழங்கப் படவில்லை. உள்ளாட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தப் பயனும் இல்லை. மேலும், இடியுடன் கூடிய  மழையில் அறுந்து விழுந்த மின் கம்பிகள் நான்கு நாட்களாகியும் சரிசெய்யப்படாததால், அந்தப் பகுதி யில் மின் விநியோகமும் தடைபட்டு பொதுமக்கள் மிகுந்த  சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால், பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் ஆலங்குடியில் இருந்து அறந்தாங்கி செல்லும் பிரதான சாலையில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அதிகா ரிகள் வராததால், ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலாக  போராட்டம் நீடித்தது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் வருவாயத்துறை அதிகாரிகள் போச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக குடிநீர் கிடைப்பதற்கும், மின்சா ரத்தை சரிசெய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என  உறுதியளித்ததைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.

மாற்றுத்திறத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்கள் விருது பெறலாம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 21- மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களைத் தேர்வு குழு மூலம் தேர்ந்தெடுத்து, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு   தமிழக முதல்வர் மாநில விருது வழங்கி ஊக்குவித்து கௌரவிக்கப்படுகிறார். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திற னாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள், மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத் தும் பொருட்டு, சுதந்திர தின விழா அன்று விருதுகள் வழங்கப் படவுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், ரூ.50,000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றி தழ், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், மற்றும் சான்றிதழ். மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிகள வில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்திற்கு 10  கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ். மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்  பணியாளருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம்  மற்றும் சான்றிதழ். மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவில்  கடன் வழங்கிய சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும்  சான்றிதழ்.     மேற்காணும் விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் விரு தாளர்கள் https://awards.tn.gov.in என்ற வலைதளத்தில்  குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை பதிவு செய்தும், கோரப்பட்ட விவரங்களை இணைத்தும் 5.7.2024- க்குள் விண்ணப்பிக்கலாம். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.  மேலும் தகவல்களுக்கு திருச்சிராப்பள்ளி கண்டோன் மென்ட் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக  பின்புறத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவ லகத்திலோ அல்லது அலுவலக தொலைப்பேசி எண்  0431-2412590 இல் தொடர்பு கொள்ளலாம் என திருச்சிராப் பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். 

கண்புரை பரிந்துரை முகாம்

பாபநாசம், ஜூன் 21 - பணிகள் துணை இயக்குநர் கலைவாணி உத்தர வின் பேரில், தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இலவச கண் புரை பரிந்துரை முகாம் நடந்தது. கண் மருத்துவ உதவியாளர் ரெங்கராஜ் கண் புரை முற்றிய நிலையில் இருந்த 18 பேரை தெரிவு செய்து, கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள, தஞ்சாவூரிலுள்ள மண்டல கண் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தார். இதில் வட்டார மருத்துவ அலுவலர் தீபக், மருத்துவர்கள் பிரியங்கா,  ஹீரா, சண்முக வடிவு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இதேபோன்று திருவையாறு அருகே திருவாலம் பொழில் அரசு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார  நிலையம் சார்பில் நடந்த முகாமில், 23 பேரை கண் மருத்துவ உதவியாளர் ரெங்க நாயகி தெரிவு செய்து தஞ்சா வூர் மண்டல கண் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தார். இதில் வட்டார மருத்துவ அலுவலர் பிரபாகரன்,  மருத்துவர் பிரதீப் உட்பட பங்கேற்றனர்.

திருநங்கைகளுக்கான  சிறப்பு முகாம்

புதுக்கோட்டை, ஜூன் 21 - சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில்,  திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், “இம்முகாமில் திருநங்கைகள் தங்களுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு மற்றும்  ஆயுஷ்மான் பாரத் அட்டை போன்றவைகளை பதிவு செய்து பெற்றுக் கொண்டனர். திருநங்கைகளுக்கு ஊரக  சுய வேலை வாய்ப்பு பயிற்சிக்கான ஆலோசனையும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை தொடங்கு வதற்கான கடனுதவிகள் குறித்த ஆலோசனையும் வழங்கப்பட்டது. மேலும் 2 திருநங்கைகளுக்கு அடை யாள அட்டைகளும், 3 திருநங்கைகளுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.  மாவட்ட சமூகநல அலுவலர் க.ந.கோகுலப்பிரியா, முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் திட்ட மாவட்ட திட்ட  அலுவலர் சு.ரவிசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

100 நாள் வேலை கேட்டு  பருத்திச்சேரியில் சிபிஎம் மனு கொடுக்கும் போராட்டம்

கும்பகோணம், ஜூன் 21 - தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பருத்திச்சேரி ஊராட்சியில், ஆதி திராவிட வகுப்பு மற்றும் பிற்படுத்தப்பட்ட நடுத்தர வர்க்கத்தினர் ஏராளமானோர் குடும்பங்களாக வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் செய்ய முடியாமல், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் நூறு நாள் வேலைக்குச் சென்று தனது குடும்பங்களை கவனித்து வந்தனர். இதற்கிடையில், நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பையொட்டி, நூறு நாள் வேலை கடந்த 3 மாதங்களாக நிறுத்தப்பட்டது. இதனால் வருமானமின்றி, மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் சார்பில் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பருத்திச்சேரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவரை சந்தித்து நூறு நாள் வேலை கேட்டு மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு பருத்திச்சேரி சிபிஎம் கிளைச் செயலாளர் வீரமணி தலைமை வகித்தார். மனு கொடுக்கும் போராட்டத்தில் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பழனிவேல், விவசாயிகள் சங்க பொறுப்பாளர் ஜோசப் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்றத் தலைவர் சேகர் மனுக்களை பெற்றுக்கொண்டு, அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

சட்டவிரோத மது விற்பனையை தடுக்க நடவடிக்கை புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை, ஜூன் 21- சட்ட விரோதமாக மது விற்பனை மற்றும் மது அருந்து தலைத் தடுப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் புதுக்கோட்டை  மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் வியா ழக்கிழமை நடைபெற்றது.  பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், “கள்ளத்தனமாக மது விற்பனை செய்து பிடிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்த  ஒரே நபர் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார் எனக்  கண்டறியப்பட்டால் அவர் மீது குண்டர் சட்டப் பிரிவின்கீழ் வழக்குப் பதிந்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பயன்பாடு இல்லாத அரசு கட்டிடங்கள், கைவிடப்பட்ட, இயங்காத குவாரிகளில் கள்ளத்தனமாக மது மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாடு செய்யப்படுவது குறித்தும் காவல்துறை திடீர் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக அதிகளவில் வழக்குகள் பதிவு செய்யப் பட்ட கறம்பக்குடி, கந்தர்வகோட்டை, ஆலங்குடி மற்றும் காப்புக்காடுகள் உள்ள பகுதிகளில் தொடர் ஆய்வு செய்ய  வேண்டும். பெயிண்ட் மற்றும் வார்னிஷ் போன்ற பொருட்கள்  தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யப்படும் இடங்களில் மெத்த னால் போன்ற போதை உண்டாக்கக் கூடிய பொருட்கள் அதிக  அளவு கொள்முதல் அல்லது விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும். மருந்தகங்களில் அதிக போதையை உண்டாக்கக் கூடிய மாத்திரை, மருந்துகள், போதை ஊசி விற்பனை செய்யப் படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என காவல் துறையினருக்கும், அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், சட்ட விரோதமாக போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து 85310 85350 என்ற கட்செவி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்” என்றார். கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) முருகே சன், இலுப்பூர் கோட்டாட்சியர் தெய்வநாயகி, இணை இயக்கு நர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) எஸ்.ஸ்ரீபிரியா,  தேன்மொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருச்சி மண்டலத்தில்  91 கள்ளச்சாராய வழக்குகள் பதிவு: 15 பேர் கைது

மத்திய மண்டல ஐஜி தகவல் திருச்சிராப்பள்ளி, ஜூன் 21- திருச்சி மத்திய மண்டலத்தில் மொத்தம் 91 கள்ளச்சாராய வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளது. மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தி லும் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவர் துறைத் தலைவர் க.கார்த்திகேயன் தெரி வித்துள்ளார். கள்ளக்குறிச்சி பகுதியில், கள்ளச்சாரா யம் குடித்த சம்பவத்தில் வெள்ளிக் கிழமை வரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.  இந்த சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி  நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இது தொடர்பாக மாநில அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. காவல்துறையும் பல்வேறு சோத னைகள், கைது நடவடிக்கைகள், சாராய  ஊறல்கள் அழிப்பு உள்ளிட்ட நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், திருச்சி மத்திய மண்ட லத்தில் கள்ளச்சாராயத்தை தடுக்கும் வகை யில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து காவல்துறைத் தலைவர் (ஐஜி) க.கார்த்திகேயன் தெரிவித்ததாவது: மத்திய மண்டலத்தில் அனைத்து மாவட் டப் பகுதிகளிலும் காவல்துறை கண்காணிப் பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் தலைமையில், ஏராள மான போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளனர். கள்ளச்சாராயம் புழக்கத் தில் உள்ளதாக சந்தேகப்படும் பகுதிகளில் அதிரடி சோதனையிலும் ஈடுபட்டு, வழக்கு களும் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் மாவட்ட வாரியாக, திருச்சி மாவட்டத்தில் 4 வழக்குகளும், புதுக் கோட்டையில் 7, கரூரில் 17, பெரம்பலூரில் 12, அரியலூரில் 4, தஞ்சாவூரில் 11, திருவா ரூரில் 24, நாகப்பட்டினத்தில் 8, மயிலாடு துறையில் 4 என மொத்தம் 91 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கள்ளச்சாராய வழக்குகளில் ஏற்கெனவே, குண்டர் தடுப்பு  சட்டத்தின் கீழ் 15 பேர் மீது கைது நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்க னவே சாராய வழக்குகளில் தொடர்பு வைத்தி ருந்த 1,265 பேரிடம் விசாரணையும் நடத்தப் பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில், கடந்த ஒரு வரு டத்தில், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றது தொடர்பாக 203 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. வியாழக்கிழமை ஒரே நாளில் 197 அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டதுடன், மேலும் சில மாதங்களுக்கு தொடர்ந்து தினசரி 200 சோதனைகள் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு நாளில் நடத்திய சோதனையில் மட்டும் ரூ. 3.20 லட்சம்  மதிப்புள்ள சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டு,  தொடர்புடைய பொருட்கள் பறிமுதலும் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

;