districts

img

நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருநெல்வேலி, ஜூலை 2-

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவா லயங்களில் ஒன்றான நெல்லை டவுன்  சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த கோவிலாகும். இங்கு சுவாமி,  அம்பாளுக்கு என தனித்தனி சன்னதி கள் உள்ளன. ஆனிப் பெருந்திரு விழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்  றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் தினமும் காலை-மாலை என 2 வேளை களிலும் சுவாமி நெல்லையப்பர்-காந்தி மதி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆனித் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி நெல் லையப்பர், காந்திமதி அம்பாள், விநா யகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய  5 தேர்களும் அலங்காரங்கள் செய்யப்  பட்டு தயார் நிலையில் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை சபாநாய கர் அப்பாவு, அமைச்சர் சேகர்பாபு ஆகி யோர் தேரோட்டத்தை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து கோவிலில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.  

    நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், முன்னாள் சபாநாய கர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்  கான், எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, மாநகராட்சி கமி ஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.