districts

img

கரூரில் தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய வேலைநிறுத்த ஆயத்த மாநாடு

கரூர், டிச.11 - தொழிலாளர்களுக்கு விரோதமான நான்கு சட்ட தொகுப்புகளையும், மின்சார திருத்த சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும்‌. தேசிய பணமாக்கும் கொள்கை உள்ளிட்ட எந்த பெயராலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2022 பட்ஜெட் கூட்டத் தொடரின் போது ஒன்றிய, மாநில தொழிற்சங்கங்களின் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. எல்பிஎப், ஐஎன்டியுசி, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் கரூர் மாவட்டக்குழு சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு கரூரில் உள்ள எல்பிஎப் அலுவலகத்தில் நடைபெற்றது.  எல்பிஎப் சங்க மாவட்ட தலைவர் வி.ஆர்.அண்ணாவேலு தலைமை வகித்தார். எல்பிஎஃப் சங்க  மாநிலத் தலைவர் பஷீர் அகமது, சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.சுப்பிரமணியம், மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் சி.முருகேசன், எல்பிஎப் பழ.அப்பசாமி, ஏஐடியுசி மாவட்ட செயலாளர் வடிவேலன், ஐஎன்டியுசி ஜெயராமன், எல்எல்எப் மாநில அமைப்பாளர் க.பேரறிவாளன், ஏசிசிடியு பால்ராஜ் ஆகியோர் பேசினர்.  வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டு வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக கரூர் மாவட்டத்தில் நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

;