கும்பகோணம், ஜூன் 11-
கும்பகோணம் மாஸ் கல்வியல் கல்லூரியில் ‘கல்வி மற்றும் தொழில் நுட்பத்தில் இன்றைய நிலை’ பற்றிய தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி தாளாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். கல்லூரி துணை முதல்வர் சரவ ணன் வரவேற்றார். கல்லூரி செயலர் மாலினி விஜய குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி அறங்காவலர் விக்னேஷ் விஜயகுமார் மற்றும் மருத்துவர் சிந்துஜா வாழ்த்திப் பேசினார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக மூத்த பேராசிரி யர் கண்ணன், மதுரை தியாகராஜர் கல்லூரியின் மூத்த பேராசிரியர் அன்பழகன், பாண்டிச்சேரி தாகூர் கல்லூரி யின் பேராசிரியர் இருசப்பன் உட்பட பலர் பேசினர். கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் ஜெயக்குமாரி, மாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கருணாநிதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
தேசிய அளவில் பல மாணவர்களும் பேராசிரியர்களும் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இக்கருத்தரங்கில் விவா திக்கப்பட்ட பல்வேறு கல்வி பற்றிய செயல் அறிக்கை கள் ஒன்றிய, மாநில அரசுகளிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.