மயிலாடுதுறை, நவ.21 - மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே 25 ஆண்டு களாக சாலை சீரமைக்கப்படா ததை கண்டித்து, கிராம மக்கள் சாலையில் நாற்று நடவு செய்து போராட்டத்தில் ஈடு பட்டனர். தரங்கம்பாடி வட்டம் கடக்கம் ஊராட்சி (1 ஆவது வார்டு) சோலையாம்பட்டினம் கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகு தியில் உள்ள தார்ச் சாலை கோடங்குடி ஊராட்சியையும், கிளியனூரையும் இணைக் கும் இணைப்புச் சாலையாக உள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒரு கிலோ மீட்டர் வரையிலான இச்சாலை, தற்போது குண்டும் குழியு மாக, கற்கள் பெயர்ந்து, பள்ளம் ஏற்பட்டு மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மோசமான நிலையில் காணப் படுகிறது. இப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிலான, கிளிய னூரில் உள்ள பள்ளி மற்றும் அரசு மருத்துவமனைக்கு செல்வதற்கு கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். மழைக்காலங்களில் இச்சாலை சேறும் சகதியுமாக இருப்ப தால், ஆம்புலன்ஸ்கூட கிராமத் திற்குள் வர முடியவில்லை. கோடங்குடி மற்றும் சோலையாம்பட்டினம் கிராமத் தில் இருந்து சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கிளிய னூரில் உள்ள பள்ளிக்கூடத் திற்கு இந்த சாலையை கடந்துதான் செல்கின்றனர். கடந்த 10 நாட்களாக பெய்து வந்த தொடர் மழையால், இச்சாலை சேறும் சகதியுமாக கிடக்கிறது. இதனால் மாண வர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ள னர். சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் பலமுறை மனு அளித் தும், தார்ச்சாலை அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கிரா மத்தை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் செவ் வாயன்று சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.