திருச்சிராப்பள்ளி, செப்.27 - ஆட்டோ தொழிலை பாதுகாக்க ஆட்டோ விற்கான இணைய வழி சேவையை நலவாரியத்தின் மூலம் துவக்கி தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். ஆட்டோ தொழி லாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க டீசல், பெட் ரோல், கேஸ் மானிய விலை யில் வழங்க வேண்டும். குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஆட்டோ ஓட்டுநர்களுக் கும் வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். திருச்சி மாவட்ட தன்மைக்கு ஏற்றார் போல் நியாயமான மீட்டர் கட்டணத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஆட்டோ ரிக்சா ஓட்டுநர் சங்கம் சார்பில் செவ்வா யன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு ஆட்டோ ரிக்சா ஓட்டு நர் சங்க மாவட்ட தலைவர் சார்லஸ் தலைமை வகித் தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி ஆட்டோ தொழிலா ளர் சம்மேளன மாநில பொதுச் செயலாளர் சிவாஜி, சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் சீனிவா சன், ஆட்டோ சங்க மாவட்ட பொதுச் செயலாளர் மணி கண்டன் ஆகியோர் பேசி னர். ஆர்ப்பாட்டத்தில் பொரு ளாளர் பழனியப்பன், அமைப்பு செயலாளர் வெற்றிவேல், ஜங்சன் பகுதி தலைவர் அழகுமலை, செயலாளர் வேல்முருகன், பொருளாளர் சிலம்பு செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.