districts

img

கலைமகள் பள்ளியின் 40 ஆம் ஆண்டு விழா

மயிலாடுதுறை, பிப்.27- மயிலாடுதுறை மாவட்டம் திருவிளை யாட்டம் கலைமகள் மெட்ரிக்குலேசன் பள்ளி யின் 40-ஆவது ஆண்டு மாணிக்க விழா ஞாயிறன்று நடைபெற்றது. விழாவிற்கு கலைமகள் கல்வி நிறு வனங்களின் தாளாளர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். இயக்குநர் என்.எஸ்.குடி யரசு, செயலாளர் ஜெயப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகக்குழு உறுப்பி னர் மு.செந்தமிழ்செல்வி மாணிக்க விழா பேர ணியை துவக்கி வைத்தார். முதல்வர் க.ராஜேஷ் கண்ணா நன்றி கூறினார். பேரணியை தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழாவில், திரைப்பட நகைச்சுவை நடிகர் கிங்காங் என்கிற இ.சங்கர், அரசு மருத்துவர் எம்.கார்த்திக், நிர்வாகக்குழு உறுப்பினர் ரம்யா, செம்பனார்கோயில் ஒன்றி யக் குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், சிபிஎம் மாவட்  டச் செயலாளரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.