districts

மாசில்லா தீபாவளி மேளா

கும்பகோணம், நவ.10 - தீபாவளியை முன்னிட்டு கும்பகோ ணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாணவ-மாணவியர்களால்  மாசில்லா தீபாவளி மேளா கொண்டாடப்பட்டது. உண்டு மகிழ ஜீனி மிட்டாய், கடலை  மிட்டாய், பாக்கு மிட்டாய் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்காத மிட்டாய் வகைகளும், குழி பணியாரம், பருப்பு பணியாரம், பச்சரிசி மாவு அதி ரசம் போன்ற பழங்கால இனிப்பு வகை களும், சிகப்பரிசி சாதம், வரகு சாதம்,  போன்றவற்றை மாணவர்கள் விற்ப னைக்கு வைத்திருந்தனர்.  இந்த மேளாவில், சிறப்பாக இருந்த முதல் பத்து உணவு வகைகளுக்கு பரிசு களும் சான்றிதழ்களும் வழங்கப் பட்டன. முன்னதாக பள்ளி முதல்வர் அம்பிகாவதி வரவேற்றார்.