கும்பகோணம், டிச.11 - மகாகவி சுப்பிரமணி பாரதியாரின் 139-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் கடைத்தெருவில் அமைந் துள்ள மகாகவி பாரதியாரின் உருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சி யில் பாரதியாரின் தமிழ்ப் பற்று குறித்து தமுஎகச மாவட்ட தலைவர் கவிஞர் ஜீவபாரதி குழந்தை களுக்கு எடுத்துரைத்தார். நாடக கலைஞர் நீல மேகம், நாகேந்திரன், பக்கிரிசாமி, நாராயண சாமி, சுப்ரமணியன் மணிமூர்த்தி, உள்ளிட்ட தமிழ் மொழி பற்றாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டா டினர். கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை சார்பில் பாரதியாரின் பிறந்தநாள் விழா கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது. கல்லூரி முதல்வர் க.துரையரசன் தலைமை வகித்தார்.
பாபநாசம்
மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு பாபநாசத்தை அடுத்த திருக்கருக்கா வூர் சோழன் தொடக்கப் பள்ளியில் பாரதியாரின் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத் தப்பட்டது. பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பாரதியாரின் படத்திற்கு பள்ளி நிர்வாகி சிவ சண்முகம் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் ஆசிரியைகள், மாண வர்கள் பங்கேற்றனர். இதேபோன்று பண்டாரவா டையில் பாரதியின் படத்திற்கு சமூக ஆர்வலர் நவநீத கிருஷ்ணன் மாலையணிவித்து மரி யாதை செலுத்தினார்.
மன்னார்குடி
பாரதியின் 140 பிறந்தநாள் நிகழ்ச்சி மன்னார்குடி மேரினா கிராமத்தில் அவரது நினை விடத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ஜி.தாயு மானவன், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ஜி.ரகுபதி, தமு மாவட்டக்குழு உறுப்பினர் கே. பிச்சைகண்ணு, தமுஎகச செயலாளர் ஏசுதாஸ், சிஐடியு இணைப்பு சங்க தலைவர்கள் ஜி.முத்து கிருஷ்ணன், டீ.ஜெகதீசன், தியாக.சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செய்தனர்.