அரியலூர்/சீர்காழி, டிச.21 - அரியலூரில் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு லிகாய் முகவர்கள் சங்கம் அமைப்பு தின விழா கிளை தலைவர் எம்.ராமலிங்கம் தலைமை யில் நடைபெற்றது. எல்ஐசி அலுவலகம் முன்பு சிஐடியு மாவட்ட செயலாளர் கிருஷ் ணன் சங்க கொடியினை ஏற்றினார். முன்ன தாக அமைப்பு செயலாளர் நீலமேகம் வர வேற்றார். சிஐடியு மாவட்ட பொருளாளர் ஆர். சிற்றம்பலம், கிளை மேலாளர் கே.கீதா (LIC.), உதவி கிளை மேலாளர் வி.மகேஷ், ஆர். ஜி.மணவாளன் ஆகியோர் வாழ்த்துரை வழங் கினர். அகில இந்திய பொதுக் குழு உறுப்பி னர் டி.மாலதி, மாநில குழு உறுப்பினர் வி. முருகானந்தம் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். முடிவில் முதன்மை ஆலோசகர் கோட்ட செயற்குழு உறுப்பினர் லிகாய் எஸ்.செல்வ ராஜ் நன்றி கூறினார்.
சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கிளை யில் திங்களன்று லிகாய் அமைப்புதினம் கிளைத் தலைவர் ஆர்.எஸ்.இளங்கோவன் தலைமையிலும், செயலாளர் கே.கேசவன், பொருளாளர் பட்டியமேடு பத்பநாபன் முன்னி லையிலும் நடைபெற்றது. லிகாய் சங்க கொடியை சீர்காழி கிளை மேலாளர் சிவாஜி ஏற்றி வைத்து வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சி யில் எல்ஐசி முகவர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.