கரூர், மே 30-
கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (https://skilltraining.tn.gov.in/DET/) என்ற இணையதளம் மூல மாக இணைய வழி சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 7.6.2023. கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் வந்தும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கீழ்க் கண்ட தொழிற் பிரிவுகள் 1. தையல் தொழிற்நுட்ப பயிற்சி 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி, பயிற்சி காலம் -1 ஆண்டு (மகளிர்மட்டும்). கணினி தொழிற்நுட்ப பயிற்சி 10-ம் வகுப்பு தேர்ச்சி, பயிற்சி காலம்-1 ஆண்டு (மகளிர்மட்டும்). Mechanic Auto Body Repair - 10-ம் வகுப்பு தேர்ச்சி, பயிற்சி காலம்-1 ஆண்டு (ஆண்/பெண் இருபாலரும்). Operator Advanced Machine Tools - 10-ம் வகுப்பு தேர்ச்சி, பயிற்சி காலம் -2 ஆண்டு (ஆண்/ பெண் இருபாலரும்).
அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் பயிற்சி யாளர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை, இல வச பேருந்து கட்டண சலுகை, மிதிவண்டி, மடிக்கணினி, பாடப் புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் அரசால் வழங்கப்படும். மேலும் அரசு தொழிற்பயிற்சி நிலை யங்களின் சேர்க்கை தொடர்பான கூடுதல் விபரங்க ளுக்கு கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை தொலைபேசி எண்.04324-222111, 7538877430 வாயிலாக அல்லது நேரில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளு மாறு கரூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர் தெரி வித்துள்ளார்.