districts

img

மேக் ஓ.எஸ்-இல் ‘கோபைலட்’ செயலி அறிமுகம்!

மேக் ஓ.எஸ்-இல் ‘கோபைலட்’ செயலி அறிமுகம்!

மேக் இயங்குதளத்திற்கான (ஓ.எஸ்) கோபைலட் (Copilot) செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஏ.ஐ சாட்பாட்டான கோபைலட், கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. மற்ற சாட்பாட்களை போலவே, கோபைலட்டும் தகவல்களை வழங்கவும், புகைப்படங்கள், உரைகள் உள்ளிட்டவற்றை உருவாக்கவும் உதவுகிறது. இதுவரை, கோபைலட் செயலி, விண்டோஸ், ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. மேக் ஓ.எஸ் பயனர்கள், கோபைலட்டின் இணைய பதிப்பை மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளில் மேக் ஓ.எஸ்-இல் கோபைலட் (Copilot) செயலி வெளியிடப்பட்டுள்ளது. இந்த செயலி, ஆப்பிள் ஆப் ஸ்டோரில் (Apple App Store) பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். மேக் ஓ.எஸ்-இல் கோபைலட்டை நிறுவ, உங்கள் சாதனம் macOS 14.0 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பில் இயங்க வேண்டும். மேலும் மேக் சாதனங்கள், ஆப்பிள் நிறுவனத்தின் சிலிக்கான் சிப்பைக் கொண்டிருக்க வேண்டும். இந்த பதிப்பில் டார்க் மோட் (Dark Mode) வசதி உள்ளது. விண்டோஸ் பதிப்பில் ‘Alt + Space’ என டைப் செய்தால், கோபைலட் செயலியை திறந்து பயன்படுத்தலாம். இது போலவே மேக் ஓ.எஸ் பதிப்பில் ‘Command + Space’ என்ற Shortcut-ஐ பயன்படுத்தலாம். விரைவில் மேக் ஓ.எஸ்-இல் ‘கோபைலட்’ செயலி, படிப்படியாக மற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என மைக்ரோசாப்டின் AI தலைமை நிர்வாக அதிகாரி முஸ்தபா சுலேமான் தெரிவித்துள்ளார்.

கூகுளில் இருந்து உங்கள் தரவுகளை நீக்க புதிய அம்சம் அறிமுகம்!

கூகுள் தளத்தில் இருந்து உங்கள் தனிப்பட்ட தகவல்களை நீக்க ‘Results about you’ என்ற புதிய டூலை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம், கூகுள் தேடல் முடிவுகளில் காண்பிக்கும் உங்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண் போன்ற தனிப்பட்ட தகவல்களைக் கண்டறியும். இதற்கு முதலில், Results about you டூலில் Sign-in செய்து, நீங்கள் ஸ்கேன் செய்ய விரும்பும் பெயர், முகவரிகள், தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை Google-க்கு வழங்க வேண்டும். அதன்பின் ஸ்கேன் செய்து, நீங்கள் நீக்க விரும்பும் தரவுகளை கண்டறிந்து, “remove this result”  என்ற ஆப்ஷனை கிளிக் செய்து நீக்கிவிடலாம். ஒருவேளை, மீண்டும் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் கண்டறியப்பட்டால், அது குறித்த நோட்டிஃபிக்கேஷனை கூகுள் உங்களுக்கு அனுப்பும். இதன் மூலம் அதனை நீக்க கூகுளுக்கு Request அனுப்பலாம். “Results about you” டூல், தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், மெக்சிகோ, ஸ்பெயின், பிரான்ஸ், சுவீடன், தாய்லாந்து, இந்தியா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே கிடைக்கிறது.