districts

திருச்சி முக்கிய செய்திகள்

விடுதி, இல்லங்கள்  உரிமம் பெற அறிவுறுத்தல்

அரியலூர், ஜூன் 20- அரியலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கான விடுதிகள், பணிபுரியும் பெண்கள் விடுதிகள், பெண்களுக்கான இல்லங்கள், சிறார் இல்லங்கள், பள்ளி குழந்தைகளுக்கான விடுதிகள், பள்ளியுடன் இணைந்த விடுதிகள் நடத்தும் நிறுவனங்கள் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். இந்த உரிமம் பெறாத விடுதிகள் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுவதாக கருதப்படும். எனவே உரிமம் பெறாத விடுதிகள் ட்ற்ற்ல்ள்://ற்ய்ள்ஜ்ல்.ஸ்ரீர்ம் என்ற இணையதளம் வழியாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் பெறாத விடுதிகள் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்க தவறினால் விடுதியினை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி தெரிந்துக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

ஜூன் 28 புதுகையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

புதுக்கோட்டை, ஜூன்.20-  புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சிய ரகக் கூட்ட அரங்கில் ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலை மையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் விவசாயம் சம்பந்தப் பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள்.  எனவே, விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது பயிர்சாகுபடிக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள் மற்றும் வேளாண் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வதுடன், விவசாயம் தொடர்புடைய கோரிக்கை களை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூர், ஜூன் 20- ஒன்றிய அரசின் பத்ம விருதுகள் பெற தகுதியுள்ள அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் தெரிவித்தது: கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு 26.1.2025 அன்று குடியரசு தினத்தன்று பத்ம விருதுகள்(பத்ம விபூசன், பத்ம பூசன் மற்றும் பத்ம)வழங்கப்படுகிறது. இவ்விருதுகள் தொழில், இனம், உத்யோகம், பாலினம் என வித்யாசமின்றி வழங்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய மற்றும் விளையாட்டுக்களில் சாதனை புரிந்தவர்கள் ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ஞ்ர்ஸ்.ண்ய் மற்றும் ட்ற்ற்ல்ள்://ல்ஹக்ம்ஹஹஜ்ஹழ்க்ள்.ஞ்ர்ஸ்.ண்ய்  என்ற   இணையதள முகவரியில் ஜூன் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இணையதளம் வாயிலாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ந.லெனின் கைப்பேசி 7401703499  என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.

அக்னிவீர் ஆள் சேர்ப்பிற்கான முகாம் 

மயிலாடுதுறை ஜூன்- இந்திய விமானப்படைக்கான அக்னிவீர்வாயு (இசைக்கலைஞர்) இராணுவ ஆள் சேர்ப்பு முகாம் வருகின்ற 03.07.2024 முதல் 12.07.2024 வரை கர்நாடக மாநிலம், பெங்களூரு விமானப்படை தேர்வு மையத்தில் நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  22.05.2024 முதல் 05.06.2024 வரை இத்தேர்விற்காக விண்ணப்பித்துள்ளவர்கள் இம்முகாமில் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர்கள், மேற்படி முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது

திருச்சிராப்பள்ளி, ஜூன்,20, திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்தின் வளாகத்தில் புதனன்று  ஸ்ரீரங்கம் போச்சம்பட்டி இனாம் புலியூர் பகுதியை சேர்ந்த குமார் ( வயது 35) என்ற நபர் மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உறவினரை  பார்ப்பதற்கு வந்தார். அப்போது  சட்டென்று அவரது பாக்கெட்டில் இருந்த பணத்தை பறித்த கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆரல்வாய்மொழி மருத்துவர் நகரை சேர்ந்த பார்த்திபன் (வயது 20) என்ற நபரை குமார் கையும் களவுமாக பிடித்தார். உடனடியாக அவரை அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் ஒப்படைத்தனர். பின்பு பறிக்கப்பட்ட பணத்தை பறிமுதல் செய்து குமாரிடம் காவல்துறை ஒப்படைத்தனர். வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட பார்த்திபனை கைது செய்து அவர் மீது அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்

லாட்டரி விற்ற  2 பேர் கைது

திருச்சிராப்பள்ளி, ஜூன் 20- திருச்சி உறையூர் பகுதிகளில் லாட்டரி டிக்கெட் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்  காவல் உதவி ஆய்வாளர் வினோத் தலைமையில் போலீசார்  ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அங்கே நவாப் தோட்டம் நெசவாளர் காலனி இரண்டாவது தெரு பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 65) என்ற முதியவர் நெசவாளர் காலனி பகுதியில் லாட்டரி டிக்கெட் விற்றுக் கொண்டிருந்தார். அவரை பிடித்து அவரிடம் இருந்து லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், பின்னர் அவர் மீது உறையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து,திருச்சி மத்திய  சிறையில் அடைத்தனர். இதே போன்று கோட்டை பகுதியில் வள்ளுவர் நகர் மதுரை ரோடு சந்திப்பு அருகே லாட்டரி சீட்டுகள் விற்றதாக முகமது இலியாஸ் என்ற வாலிபரை கோட்டை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

பாஸ்போர்ட்டில் முறைகேடு செய்து  பயணித்த 2 பேர் திருச்சி விமான நிலையத்தில் கைது

திருச்சிராப்பள்ளி, ஜூன், 20- மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு, ஏர் ஏசியா விமானம்  வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளின் பயண ஆவணங்களை குடி யேற்றப்பிரிவினர் வழக்க மான சோதனைகளுக்கு உள்ளாக்கினர். இதில், அரிய லூர் மாவட்டம் உடையார் பாளையம் அருகேயுள்ள உள்ளியக்குடி, கோரைக் குடி பகுதியைச் சேர்ந்த  மணி மொழி (51) என்பவரின் கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்களை சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவர் மலே சியா செல்லும் முன்பு, போலி ஆவணங்களைக் கொண்டு முறைகேடு செய்து, கடவுச் சீட்டில் மணி என அவரது பெயரை மாற்றம் செய்து, பிறந்த தேதியையும் மாற்றி பயணித்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸாரிடம் ஒப்ப டைத்தனர். இது தொடர்பாக திருச்சி விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து மணிமொழியை புதன்கிழமை கைது செய்த னர்.இதேபோல் போலி பாஸ்போர்ட்டில் வந்த தெலுங்கானா மாநிலம் ருத்ரவரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் குந் தாலி என்பவர் திருச்சியில் இருந்து மலேசியா செல்ல முயன்றார். அப்போது திருச்சி விமான நிலை யத்தில் இமிகிரேஷன் அதி காரிகள் அவரது பாஸ்போர் ட்டை சோதனையிட்டனர். பாஸ்போர்ட்டில் முறைகேடு செய்து பயணிக்க இருந்தது தெரியவந்தது. உடனே  அதிகாரிகள் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர். அவரையும் விமான நிலைய போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
 

;