சீர்காழி, டிச.11 - மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றங்கரை யோரம் உள்ள சந்தப் படுகை, திட்டுப்படுகை, முதலைமேடு, நாணல்படுகை, அளக்குடி, மகேந்திரப்பள்ளி, காட்டூர், நாணல் படுகை, முதலைமேடுதிட்டு, நாதல் படுகை, குத்தவக்கரை, சரஸ்வதி விளாகம், சிதம்பரநாதபுரம், பாலூரான்படுகை மாதிர வேளூர், வாடி, வடரங்கம், பனங்காட்டாங்குடி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில தினங்களாக ஆடு மற்றும் மாடு கள் உள்ளிட்ட கால்நடைகள் நோய்களால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சில பகுதிகளில் மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் துவங்கியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தொ டர்ந்து பெய்த மழையால் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் நிரம்பி வழிந்தது. மேலும் கரையோர கிராமங்களில் உள்ள வயல்கள் நீரில் மூழ்கின, தற்போது நீரில் மூழ்கிய வயல்க ளில் தண்ணீர் வடிய தொடங்கியுள்ளது.
இந்நிலையில் ஆற்றங்கரை சாலை ஓரம் மற்றும் கரை யோர கிராமங்களில் உள்ள வரப்புகள், மேடுகள் உள்ளிட்ட பகுதிகளின் புல்லை ஆடு, மாடுகள் உண்பதால் நோய் தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே பள்ளங்களில் தேங்கியுள்ள மழை நீரை கால்நடைகள் குடித்து விடு கின்றன. சுகாதாரம் இல்லாமல் இருப்பதால் இதுவும் நோய் தாக்குதலுக்கு காரணமாக அமைகிறது. இதேபோல் செல்லப் பிராணிகளான நாய், பூனை, கோழி உள்ளிட்ட உள்ளிட்டவையும் பாதிக்கப்படுகின்றன. தற்போது உள்ள சூழ்நிலையில் கால்நடை மருத்துவமனை மற்றும் துணை மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் உதவி யாளர்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே உடனடியாக கூடுதல் எண்ணிக்கையில் மருத்துவர்கள் மற்றும் உதவியா ளர்களை கொண்டு கிராமங்கள் தோறும் மருத்துவ குழு வினர் நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.