districts

ஒழுங்குமுறை  விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடை பெற்றது

பாபநாசம், ஜூலை 10 -

    தஞ்சாவூர் விற்பனைக்குழு, பாபநாசம் ஒழுங்குமுறை  விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடை பெற்றது. தஞ்சாவூர் விற்பனைக் குழுச் செயலாளர் சரசு  தலைமை வகித்தார். மேலாளர் சரண்யா, ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர்கள் கும்பகோணம் பிரியமாலினி, பாபநாசம் தாட்சாயிணி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.  

    ஏலத்தில் பாபநாசம் மற்றும் இதைச் சுற்றியுள்ள பகுதிகள், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, இடங்கண்ணி, விளத்தூர், எரவாஞ்சேரி, அகராத்தூர் உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த 2076 விவசாயிகள் ரூ.1,96,98,437 மதிப்பு டைய 3155 குவிண்டால் பருத்தியை எடுத்து வந்தனர். ஆந்திரா, கும்பகோணம், செம்பனார்கோயில், ஆக்கூர், முக்கூட்டு, பண்ருட்டி, விழுப்புரம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 12 வணிகர்கள் மறைமுக ஏலத்தில் கலந்துக் கொண்டனர். இதில் அதிகபட்சம் ரூ.6,669, குறைந்தபட்சம் ரூ.5,709, சராசரி ரூ.6,241 என விலை நிர்ண யம் செய்தனர்.