districts

விபத்துக்குள்ளான காரில் குட்கா பறிமுதல்

கும்பகோணம், ஜூலை 10-

     தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மருதா நல்லூர் பிள்ளையார் கோயில் எதிரே கார் ஒன்று விபத் துக்குள்ளானதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதை யடுத்து, நாச்சியார்கோவில் போலீசார் அங்கு சென்று,  விபத்துக்குள்ளான காரை மீட்டு காவல் நிலையத்துக்கு  கொண்டு சென்றனர். அப்போது காரை சோதனையிட்ட தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா தலா 10  கிலோ எடையுள்ள 30 மூட்டைகளில் இருந்தன. பின்னர்  அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு  ரூ.1.50 லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்  பதிந்து, மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.