districts

img

நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனப் பேரணி

அரியலூர், ஏப்.3 - மக்களவைத் தேர்தலில்  நூறு சதவீதம் வாக்க ளிப்பதன் அவசியத்தை வலி யுறுத்தி, அரியலூரில் மாற்றுத்திறனாளிகளின் மூன்று சக்கர வாகனப் பேரணி புதன்கிழமை நடை பெற்றது. ஆட்சியர் அலுவலகத் தில் தொடங்கிய பேரணியை தேர்தல் நடத்தும் அலுவ லர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா  கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியா னது பிரதான சாலை வழி யாகச் சென்று அண்ணா சிலை அருகே நிறை வடைந்தது. பேரணியில் 100  மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தேர்தல் விழிப் புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக ஆட்சியர் மாற்றுத்திறனாளி களுக் கென கையெழுத்து இயக்கத்தை ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தொ டக்கி வைத்தார். இந்நிகழ்ச் சியில் அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்ட னர். வருவாய் கோட்டாட்சி யர் ராமகிருஷ்ணன், தேர்தல் விழிப்புணர்வு அலுவலர் ராமலிங்கம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் உள் ளிட்டோர் கலந்து கொண்ட னர்.