மயிலாடுதுறை, பிப்.27- மயிலாடுதுறை அருகே மன்னன்பந்தல் ஏவிசி கல்லூரியின் 2020-ஆம் ஆண்டு மாணவர்க ளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஆர்.நாக ராஜன் தலைமை வகித்தார். தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் மேஜர் ஜி.ரவிசெல்வம், துணை முதல்வர் எம்.மதிவாணன், முதல்வர் எஸ்.மயில்வாகனன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி யும் ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதி காரியுமான கே.வெங்கட்ராமன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதில், துறைத்தலை வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.