districts

img

பாம்பு கடித்ததால் சிறுநீரக பாதிப்பு சிறுமிக்கு சிகிச்சை அளித்து அரசு மருத்துவர்கள் சாதனை

தஞ்சாவூர், டிச.1-  தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில்,  பாம்பு கடித்து சிறுநீரகம் பாதிக்கப் பட்ட சிறுமிக்கு 27 நாட்கள் சிகிச்சை  அளிக்கப்பட்ட நிலையில் வியாழக் கிழமை அவர் வீடு திரும்பினார்.  தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே துறையூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபோஸ் – ஷீலா தம்பதி. இவரது மகள் சத்திகா (10),  ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த நவ.4 அன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியின் இடது கை யில், கண்ணாடி விரியன் பாம்பு கடித் தது. வலியால் அலறித் துடித்த சிறு மியை உடனே பெற்றோர், உறவினர் கள் மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்து வர்கள், சிறுமிக்கு பாம்பு கடித்ததால் ரத்தம் உறைதல் குறைபாடு மற்றும் தற்காலிக சிறுநீரக செயலிழப்பு பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத் தான நிலையில் இருப்பதை கண்ட றிந்தனர். பின்னர், அந்த சிறுமிக்கு பாம்புக் கடி விஷமுறிவு மருத்துவம் மற்றும் டயாலிசிஸ் சிகிச்சையும் தொடர்ந்து அளிக்கப்பட்டது. இந்நிலையில், 27 நாட்களுக்கு பிறகு வியாழக்கிழமை சிறுமி சத்திகா நலமுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன், நிலைய மருத்துவ அலுவலர் செல்வம் ஆகியோர் பழங்கள் வழங்கி  வாழ்த்தி அனுப்பினர்.  மேலும், சிறுமிக்கு சிகிச்சை அளித்த  சிறுநீரகத்துறை தலைவர் மருத்து வர் ராஜ்குமார், மருத்துவர் கண்ணன்  குழுவினருக்கு முதல்வர் பாலாஜி நாதன் பாராட்டு தெரிவித்தார். தொ டர்ந்து மருத்துவக் குழுவினருக்கு சிறுமி யும், பெற்றோரும் நன்றி தெரிவித்த னர். இதுகுறித்து, மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் கூறுகையில், இந்தாண்டு பத்து மாதங்களில் 981  பாம்புக்கடி நோயாளிகளுக்கு சிகிச்சை  அளிக்கப்பட்டு 903 பேர் குணமடைந்துள் ளனர். பாம்பு கடித்தால், விஷ முறிவை  தடுப்பதற்காக கிராமங்களில் முதலு தவி என்ற பெயரில் கட்டு போடுதல், ரத்தத்தை உறிஞ்சுதல் போன்றவை கூடாது. அரைமணி நேரத்தில் அரசு  மருத்துவமனைகளில் விஷக்கடிக் கான தடுப்பூசியை செலுத்தினால் உயி ருக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்க முடி யும்.   உறுப்பு தானம் குறித்து மக்கள் மத்தியில் குறைந்த அளவில்தான் விழிப்புணர்வு உள்ளது. மூளைச் சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை மட்டுமே பயன்படுத்த முடியும்.  தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி யில் ஒன்பது பேருக்கு சிறுநீரக மாற்று  அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. மூளைச்சாவு அடைந்து உறுப்பு தானம் வழங்கிய 5 பேரிட மிருந்து பெறப்பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது. டயாலிசிஸ் பெற 31 ரத்த சுத்திகரிப்புக் கருவிகள் மூலம் 2,000 பேர் பயனடைந்துள்ளனர். டயாலி சிஸ் மூலம் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக 63 பேர்  பதிவு செய்துள்ளனர்” என்றார்.