கபிஸ்தலத்தில் ஜமாபந்தி
பாபநாசம், ஜூன் 14 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அலு வலகத்தில் கபிஸ்தலம் சரகத்திற்கான ஜமா பந்தி நடந்தது. தஞ்சா வூர் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலு வலர் சுதா ராணி தலைமை வகித்தார். இதில் சர்வே, உட் பிரிவு, பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை உட்பட 216 கோரிக்கை மனுக்கள் பொது மக்களிடமிருந்து வரப் பெற்றன. 5 பய னாளிக்கு பட்டா மாறுதல் ஆணை வழங்கப்பட்டது. பாபநாசம் தாசில்தார் மணிகண்டன், கண்கா ணிப்பாளர் ஜெயகாந்தி, பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் அருணகிரி, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் முருக குமார், துணை தாசில் தார்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.
மானியத்தில் பூண்டு விதை
பாபநாசம், ஜூன் 14 - தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையில் முதல்வரின் மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், 50 சதவீத மானி யத்தில், பசுந்தாள் உரம் வழங்கும் திட்டத்தின்கீழ் தக்கைப் பூண்டு விதை கள் மானியத்தில் வழங் கும் நிகழ்ச்சி நடந்தது. அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தலை வர் கலைச் செல்வன், பய னாளிகளுக்கு தக்கைப் பூண்டு விதைகளை வழங்கினார். இதில் தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குநர் அலு வலக தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச் சத்து திட்ட ஆலோசகர் இளஞ்செழியன், வேளா ண்மை இணை இயக்கு நர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
அறந்தாங்கி, ஜூன் 14 - புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலை அடுத்த பெரு நாவலூரில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதியோர்களுக்கு எதி ரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதி மொழி ஏற்பு கல்லூரி முதல்வர் பேராசிரியர் வீ. பாலமுருகன் தலைமை யில் நடைபெற்றது. நிகழ்வில் கல்லூரி யின் அனைத்துத் துறை தலைவர்கள், பேராசிரி யர்கள், அலுவலகப் பணி யாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு, “முதி யோர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அனைத்து வகை கொடு மைகளையும், இவை வாய்மொழியாகவோ, வன்முறை மூலமா கவோ, பொருளாதார ரீதி யாகவோ எந்த உருவில் வந்தாலும் அவற்றை கலைவதற்கு உரிய நடவ டிக்கை எடுப்பேன்” என்று உறுதிமொழி ஏற்றனர். கோமாரி தடுப்பூசி பாபநாசம், ஜூன் 14 - தஞ்சாவூர் மாவட்டம் வீரமாங்குடி கால்நடை மருந்தகம் சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. பண்டா ரவாடையில் நடந்த முகா மில் 200 கால்நடைகளுக் கும், ஆடுதுறை பெரு மாள் கோயிலில் 100 கால் நடைகளுக்கும், இலுக் பக் கோரையில் 150 கால் நடைகளுக்கும் கால் நடை உதவி மருத்துவர் வடிவேலன் தடுப்பூசி செலுத்தினார்.
ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்குக! புதுக்கோட்டை ஆட்சியரிடம் மனு
அறந்தாங்கி, ஜூன் 14 - புதுக்கோட்டை மாவட்ட கல்லணை கால்வாய் பாசனதாரர்கள் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க மாவட்டத் தலை வர் கொக்குமடை ரமேஷ், புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யாவிடம் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் உடனடியாக வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும். ஜூன் 12 அன்று மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட்டு நமது பகுதிக்கு தண்ணீர் வந்து சேரும். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு இல்லாத தால், மழையை நம்பியே விவசாயம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்நேரத்தில் ஏரிகளில் வண்டல் மண் எடுத்தால், மழை பெய்யும் பொழுது ஏரிகளில் தண்ணீரை கூடுதலாக சேமித்து வைத்து விவசாயத்துக்கு பயன்படுத்த முடியும். கடந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத் தில் வண்டல் மண் எடுப்பதற்கு ஒரு கணினி சிட்டாவிற்கு 5 முதல் 7 நாட்கள் வரை அனுமதி வழங்கப்பட்டது. மேலும் ஏரிகளில் ஜேசிபி எந்திரம் மற்றும் டிராக்டர் தேவைக்கு ஏற்றார்போல் பயன்படுத்தப்பட்டது. நமது மாவட்டத் தில் ஒரு கணினி சிட்டாவிற்கு ஒரு நாள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. அந்த சூழ்நிலையில் ஒரு ஜேசிபி எந்தி ரம் மற்றும் இரண்டு டிராக்டர் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அதுபோல் இல்லா மல், தஞ்சாவூர் மாவட்டத்தில் என்ன நடைமுறை பயன்படுத்தப்படுகிறதோ, அதே நடைமுறையை பயன்படுத்தி, புதுக் கோட்டை மாவட்டத்திலும் வண்டல்மண் எடுக்க ஆட்சியர் அனுமதி வழங்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாபநாசம் ஒழுங்குமுறை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்
பாபநாசம் ஒழுங்குமுறை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் பாபநாசம், ஜூன் 14 - வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை யின்கீழ் இயங்கும் தஞ்சாவூர் விற்பனைக் குழுவிற்குட்பட்ட பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடப்பு ஆண்டிற்கான பருத்தி மறைமுக ஏலம் வியாழனன்று தொடங்கியது. மறைமுக ஏலத்தில் பாபநாசம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான மதகரம், சத்தியமங்கலம், வலங்கை மான், கோபுராஜபுரம், அய்யம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளி லிருந்து 215 விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியினை விற்பனைக்கு எடுத்து வந்தனர். தஞ்சாவூர், நாகப்பட்டினம் கும்பகோணம், விழுப்புரம், பண்ருட்டி, செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த 7 வணிகர்கள் கலந்து கொண்டனர். வேளாண்மை அலுவலர் தாரா மறைமுக ஏலப் பணிகளை பார்வையிட்டு, விவசாயிகள் பயன்பெறும் வகையில் அதிக விலை நிர்ணயிக்க பருத்தி கொள்முதல் வணிகர்களை கேட்டுக் கொண்டார். ஏலத்தில் 30.100 மெ.டன் அளவு பருத்தி வரப்பெற்று, அதிகபட்சம் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.6939, குறைந்தபட்சம் ரூ.5049, சராசரி ரூ.5889 என விலை நிர்ண யம் செய்யப்பட்டது. பருத்தியின் மொத்த மதிப்பு ரூ. 17 லட்சம். மறைமுக ஏலம், தஞ்சாவூர் விற்பனை குழுச் செயலர் சரசு தலைமை யில், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தாட்சாயிணி முன்னி லையில் நடந்தது.
தண்ணீரில் மூழ்கடித்து ஆண் சிசு கொலை
அரியலூர், ஜூன் 15 - அரியலூர் மாவட்டம் உட்கோட்டை வெள்ளாளர் தெரு வைச் சேர்ந்தவர் வீரமுத்து-ரேவதி தம்பதியரின் மகள் சங்கீதா. சங்கீதாவை (28) கும்பகோணம் அருகே உள்ள சுந்தரபெரு மாள் கோயில் வடக்கு வீதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி யான பாலமுருகன் (31) என்பவருக்கு கடந்த ஒரு வரு டத்திற்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு பிறந்து 38 நாட்களேயான ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில், சங்கீதா தனது பெற்றோர் ஊரான உட்கோட்டையில் இருந்து வந்த நிலையில், தனது அருகில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் எங்கும் குழந்தை கிடைக்கவில்லை. இதனையடுத்து வீட்டுக்கு பின்புறம் பார்த்தபோது, அங்கி ருந்த தண்ணீர் பேரலில் போர்வையால் மூடி தண்ணீரில் மூழ்க டிக்கப்பட்டு இறந்த நிலையில் குழந்தை இருந்துள்ளது. பின்பு, ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசுவின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தை யின் இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தில் குழந்தையின் தாத்தா, பாட்டியான வீரமுத்து-ரேவதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டுக்கோட்டையில் இன்று தமுஎகச கலை இலக்கிய இரவு
தஞ்சாவூர், ஜூன் 14- மக்கள் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் 95-ஆவது பிறந்தநாள் விழா வையொட்டி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், 43-ஆவது கலை இலக்கிய இரவு நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் காசாங் குளம் வடகரையில், சனிக் கிழமை (ஜூன் 15) அன்று மாலை 6 மணி முதல் அதி காலை வரை இந்த கலை இலக்கிய இரவு நடைபெறு கிறது. இதையொட்டி, காலை 10 மணிக்கு மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்தல், மாலை 6 மணிக்கு பேருந்து நிலையத் திலிருந்து கலை இலக்கிய பேரணி மற்றும் சமூக நீதி போராளிகள் சிலைகளுக்கு மாலை அணிவித்தல், இரவு கலை நிகழ்ச்சிகள் நடை பெற உள்ளன. இதில் தமுஎகச மாநிலத் தலைவர் கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம், திரைக் கலை ஞர் ரோகிணி, கவிஞர் நந்த லாலா, தமுஎகச மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன், கவிஞர் நாறும்பூநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். நிகழ்வில், புதுகை பூபா ளம் கலைக்குழு நிகழ்ச்சி, உரை வீச்சு, நேர்காணல், கதை சொல்லல், மக்கள் ஆட்டக் கலைகள், நாடகம், கவித்தூறல், நூல் அரங் கம், நூல் அறிமுகம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற உள்ளன. ஏற்பாடுகளை பட்டுக்கோட்டை தமுஎகச கிளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்: திருவாரூரில் திட்டமிடல் கூட்டம்
திருவாரூர், ஜூன் 14 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் கிளைச் செயலாளர்கள் கூட்டம் வியாழனன்று மாவட்டக் குழு அலுவலகத்தில் நடை பெற்றது. ஒன்றியக் குழு உறுப்பினர் ரகுபதி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் ஜூலை 1 முதல் 10 ஆம் தேதி வரை தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தை, திருவாரூர் ஒன்றியத்தில் வெற்றிகரமாக நடத்துவது குறித்தும், ஒன்றிய குழுவிற்கான தீக்கதிர் சந்தா இலக்கினை வெற்றிகரமாக முடித்திட வலியு றுத்தியும் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகரா ஜன் விளக்கினார். தொடர்ந்து கிளை வாரியான கோட்ட பொறுப் பாளர்களை ஒன்றியச் செயலாளர் என்.இடும்பையன் தெரி வித்தார். கூட்டத்தின் போது, கள்ளிக்குடி கிராமம் வடக்குவெளி பகுதியைச் சேர்ந்த இருந்து மூன்று குடும்பத்தினர் தங்களை மார்க்சிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்
மயிலாடுதுறை, ஜூன் 14- மயிலாடுதுறை மாவட்டம், மாவட்ட சமூக நல அலுவ லகம் திருநங்கைகள் நல வாரியம் மாவட்ட வாரியாக உள்ள திருநங்கைகளின் விவரங்களை பதிவு செய்து குடும்ப அட்டை, அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்கப்பட உள்ளது. இதற்கான சிறப்பு முகாம் ஜூன் 21 அன்று காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் குறைதீர்ப்பு கூட்ட அரங்கில் நடைபெற இருக்கிறது. இதில் திருநங்கைகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.
அறந்தாங்கி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
அறந்தாங்கி, ஜூன் 14 - புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரியில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதலாம் ஆண்டு, மொழிப் பாடத்திற்கான (தமிழ் மற்றும் ஆங்கிலம்) பிரிவுகளுக்கு கலந்தாய்வு வெள்ளியன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பேரா. வீ.பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வில், தரவரிசை அடிப்படையில் சேர்க்கை நடைபெற்றது. கலந்தாய்வில் தமிழ் துறை தலைவர் காளிதாஸ், ஆங்கிலத்துறை தலைவர் அ. கணேசன், வணிகவியல் துறை தலைவர் கு..சீனிவாசன், இயற்பியல் துறை தலைவர் அ.டேவிட் கலைமணிராஜ், பேரா. முனைவர் இரா.கண்ணையா, கல்லூரி பேராசிரியர்கள், அலு வலக பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உடனிருந்தனர்.
இரண்டு குழுக்கள் அமைத்து குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை: எஸ்.பி. உறுதி
சிவகங்கை, ஜூன் 13- சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றியம் செவரக்கோட்டை கிராம தலித் இளைஞர் ராஜேஸ்கண்ணனை தாக்கிய தில் ஒரு கண் பார்வையிழந்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட குற்ற வாளிகள் ராபின்சன் உள்ளிட்ட 19பேரை கைது செய் வதற்காக இரண்டு தனிப்ப டைகள் அமைக் கப்பட்டுள்ளதாக மாவட்டக் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜிடம் தெரிவித்தார். கல்லல் அருகே செவரக்கோட்டை யைச் சேர்ந்தவர் தலித் ராஜேஸ்கண்ணன். இவரை ராபின்சன் உள்ளிட்ட சாதி ஆதிக்க கும்பல் தாக்கி உள்ளனர்.கொலைவெறித் தாக்குதலில் ராஜேஸ்கண்ணனின் கண் பார்வை பறிபோனது. கல்லல் காவல்நிலை யத்தில் ராபின்சன் மீது வன்கொடுமைச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எனினும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படவில்லை குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனை வரையும் கைது செய்ய வேண்டும் என வலி யுறுத்தி மாவட்ட காவல்துறைக் கண்கா ணிப்பாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மனு கொடுக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர் வி.கருப்புச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராம லிங்கபூபதி, சுரேஷ், சிஐடியு மாவட்டச் செய லாளர் வீரையா, ஆறுமுகம், முருகா னந்தம், வேங்கையா உள்ளிட்டோர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பா ளரை சந்தித்து பேசினர். அப்போது காவல் துறையினர் இரண்டு குழுவாக விசாரணை நடத்துவார்கள், 164 வது பிரிவின்படி வாக்குமூலம் பதியப்பட உள்ளது என, மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் கூறினார்.
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
தஞ்சாவூர், ஜூன் 14- தஞ்சாவூரிலுள்ள காவல் கட்டுப்பாட்டு அறையிலுள்ள 100 என்கிற தொலைபேசி எண்ணுக்கு ஜூன் 11 ஆம் தேதி மாலை அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், பழைய பேருந்து நிலையம், மேல வீதியிலுள்ள சிற்றுண்டி, நாலுகால் மண்டபம் பகுதியிலுள்ள இல்லம் ஆகியவற்றில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறினார். இதையடுத்து, மேற்கு காவல் நிலையத்தினர் தொடர்புடைய இடங்களில் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினருடன் இணைந்து சோதனை நடத்தினர். இதில், வெடிகுண்டு இல்லை என்பது தெரிய வந்தது. பின்னர், அழைப்பு வந்த கைப்பேசி எண் மூலம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதில், புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள கலைஞர் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி நவரெத்தினம் (37) என்பவர் மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து, மேற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து, நவரெத்தினத்தை வியாழனன்று கைது செய்தனர்.
ஜூன் 19, 20 ‘உங்களைத் தேடி உங்கள் ஊர்’ திட்ட முகாம்
மயிலாடுதுறை/கரூர், ஜூன் 14- மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும். “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற திட்டமானது தமிழ்நாடு முதலமைச்ச ரால் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மயி லாடுதுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத் துத் துறை அலுவலர்களால் தரங்கம்பாடி வட்ட அளவில் ஜூன் 19 (புதன்கிழமை) அன்று காலை 9 மணி முதல் ஜூன் 20 (வியாழக் கிழமை) காலை 9 மணி வரை தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்ய உள்ளனர். உங்களுடைய கோரிக்கைகளை உங்கள் ஊரிலேயே நேரில் வந்து பெற்று, உங்க ளது கோரிக்கைகளை அரசு விதிமுறை களுக்குட்பட்டு, தனி கவனம் செலுத்தி தீர்த்து வைப்பார்கள். இச்சிறப்பான திட்டத் தின்கீழ் உங்களை தேடி வரும் அரசு அலுவலர்களை சந்தித்து கோரிக்கை மனுக் களை அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார். கடவூரில் முகாம் கரூர் மாவட்டம் கடவூர் வட்டத்தில் ஜூன் 19 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக ஜூன் 14 முதல் கடவூர் வட்டத்தில் உள்ள மைலம் பட்டி, கடவூர் ஆகிய இரண்டு குறுவட்ட வரு வாய் ஆய்வாளர் அலுவலகங்களில் முகாம் நடைபெறுகிறது. இம்முகாம்களில் பொது மக்கள் அனைவரும் தங்களது கோரிக்கை களை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரி வித்துள்ளார்.
வருமான வரி செலுத்துவோருடன் நேரடி சந்திப்பு விழிப்புணர்வு கூட்டம்
கரூர், ஜூன் 14 - கரூர் மாவட்ட வருமான வரித்துறை சார்பாக, மாவட்டத்தில் வரி செலுத்துவோர் அனைவரும் பயன்பெறும் வகையில் நேரடி சந்திப்பு விழிப்புணர்வு கூட்டம் கரூரில் நடை பெற்றது. கூட்டத்திற்கு திருச்சி வருமான வரித் துறை துணை ஆணையர் கே.ஆர்.கருப்ப சாமி பாண்டியன் தலைமை வகித்து பேசுகை யில், “கடந்த ஆண்டில் தேசிய அளவிலான நேரடி வரி வசூல் வளர்ச்சி விகிதம் 18 சத வீதம். ஆனால் கடந்த ஆண்டில் திருச்சி, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் உள்ளிட்ட மதுரை பிராந்தியத்தின் நேரடி வரி வசூல் 0.98 சதவீதம் மட்டுமே. இது மிகவும் குறை வாக உள்ளது. எனவே வரி செலுத்துவோர் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு உரிய வரியினை செலுத்த முன் வரவேண்டும். ADVANCE TAX எனப்படும் முன்கூட்டியே செலுத்தப்படும் வரியை ஆண்டுக்கு நான்கு தவணைகளில் கட்ட வேண்டும். முதல் தவணை ஜூன் 15 ஆம் தேதிக்குள்ளும், மீத முள்ள தவணைகளை முறையே செப்டம்பர் 15, டிசம்பர் 15 மற்றும் மார்ச் 15 ஆகிய தேதிக் குள் கட்ட வேண்டும். முன்கூட்டியே செலுத்தப் படும் வரியினை தாமதமாக செலுத்த நேரிட் டால் வட்டி மற்றும் அபராதம் செலுத்த நேரி டும். எனவே இந்தாண்டு ஜூன் 15 ஆம் தேதிக் குள் முதல் தவணை 15 சதவீதத்தை கட்டா யம் செலுத்த வேண்டும். திருச்சி சரகத்திற்குட்பட்ட மொத்தமுள்ள நிரந்தர கணக்கு எண்கள் 30.74 லட்சம். இதில் 3.09 லட்சம் நபர்கள் மட்டுமே வருமான வரி படிவம் தாக்கல் செய்கின்றனர். இது 10 சதவீதம் மட்டுமே. அப்படி தாக்கல் செய்யும் படிவங்களில் 0.25 சதவீதம் மட்டுமே ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டு சரிபார்க்கப் படுகிறது. மீதமுள்ள 99.75 சதவீதம் படி வங்கள் வரி செலுத்துவோர் மீதுள்ள நம்பிக் கையில் அப்படியே ஏற்றுக் கொள்ளப்படு கிறது. எனவே வரி செலுத்துவோர் இதனை கவனத்தில் கொண்டு படிவங்களை அதிக அளவில் தாக்கல் செய்ய முன்வர வேண்டும். வருமான வரிப் படிவம் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31 மற்றும் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளுக்கான வருமான வரிப் படிவம் தாக்கல் செய்ய அக்டோபர் 31 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். வருமான வரிப் படிவம் காலக் கெடுவுக்குள் தாக்கல் செய்யப்படவில்லை என்றால் அபராதத் தொகை செலுத்த நேரிடும்” என்றார். வருமான வரி அதிகாரி ஆர்.முத்து கிருஷ்ணன் காணொலி (ppt) மூலம் வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியுள்ள சேவைகள் மற்றும் வருமான வரி படிவம் தாக்கல் செய்யும் போது கவனிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றிய தகவல்களை விளக்கிக் கூறினார்.