districts

ராட்சத திருக்கை மீன் ரூ.15 ஆயிரத்திற்கு ஏலம்

அறந்தாங்கி, ஜூலை 23 -

     புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி யில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் மீன்கள் விற்பனைக்கு வருகின்றன. அதே போன்று இங்கிருந்து வெளி மாவட்டங்களுக் கும் ஏற்றுமதியாகின்றன. இங்கு அரிய வகை  மீன்களும், ராட்சத மீன்களும் விற்பனைக்கு வருகிறது.  

     சனிக்கிழமை கோட்டைப்பட்டினம் மீனவர் வலையில் சிக்கிய 45 கிலோ எடை  கொண்ட ராட்சத திருக்கை மீன் கட்டுமாவடி மீன் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்தது. இந்த திருக்கை மீன் ரூ.15 ஆயிரத்திற்கு விலை போனது. இந்த மீனை மீன் வியா பாரி ஒருவர் ஏலமெடுத்தார். இந்த மீன் ஒரு  கிலோ 400 முதல் 450 ரூபாய் வரை விற்பனை யாகிறது. மருத்துவ குணம் வாய்ந்த இந்த ராட்சத திருக்கை மீனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.

;