districts

img

புதுப்பட்டினம் கடற்கரையின் அழகை கெடுக்கும் குப்பைகள்

தஞ்சாவூர், ஜூன் 21-  

      தஞ்சாவூர் மாவட்டம் சேது பாவாசத்திரம் ஒன்றியம் புதுப்பட்டி னத்தில், இயற்கையாக அமைந் துள்ள கடற்கரையை, சுற்றுலா பய ணிகளை மேலும் கவரும் வகை யில் மேம்பாடு செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கிழக்கு கடற்கரை சாலையில் சுற்று லாத் தலமான மனோராவிற்கு 5  கி.மீ அருகே புதுப்பட்டினம் கடற்  கரை கிராமம் உள்ளது. பேராவூர ணியிலிருந்து 15 கி.மீ தூரத்திலும், பட்டுக்கோட்டையிலிருந்து 15 கி.மீ  தூரத்திலும் அமைந்துள்ளது. இங்  குள்ள கடற்கரை கடந்த சில மாதங்  களாக பிரபலமடைந்து வருகிறது.  

    சனி, ஞாயிறு விடுமுறை நாட்க ளில் அதிராம்பட்டினம், மல்லிப் பட்டினம், பேராவூரணி, சேதுபாவா சத்திரம், சம்பைபட்டினம், செந்  தலைவயல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்  கள் கார், வேன்களில் புதுப்பட்டி னம் கடற்கரைக்கு அமைதியை நாடி வந்து செல்கின்றனர்.  

   சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என பொதுமக்கள் கூடு வதால், ஐஸ்கிரீம் கடைகள், பட்  டாணி, சுண்டல், மாங்காய் கீற்று  விற்பனை, குழந்தைகள் விளை யாட்டுப் பொருட்கள் விற்பனைக் கடைகள், பலூன் கடைகள், உண வகங்கள் என திடீர் கடைகள் ஏரா ளமாக முளைத்துள்ளன. அழகிய வெண்மணல் பரப்பாக இருக்கும் இந்த கடற்கரையில், சுத்தம் மற்  றும் சுகாதாரத்தை யாரும் பரா மரிக்காததால், கடற்கரை அதன் இயற்கைத் தன்மையை இழந்து வருகிறது.  

     பேராவூரணி பகுதியில் இயங்கி  வரும் ‘ழ’ பவுண்டேஷன் நிறுவனர்  கார்க்கி அசோக்குமார், தலைவர் மருத்துவர் துரை.நீலகண்டன் ஆகி யோர் தன்னார்வலர்கள் உதவி யுடன் புதுப்பட்டினம் கடற்கரை பகு தியை தூய்மைப்படுத்தும் பணி யில் ஈடுபட்டனர்.  

   இதுகுறித்து, ‘ழ’ பவுண்டே ஷன் அமைப்பினர் கூறுகையில், “பராமரிப்பில்லாததால் இந்த கடற்கரை அதன் அழகை இழந்து வருகிறது. எப்பொழுதாவது இது போல் சுத்தம் செய்வதால், எந்தப் பலனும் இல்லை. இத்தனை பெரிய கடற்கரையில் ஒரு குப்பைத் தொட்டிகூட இல்லாதது வேதனை யாக உள்ளது. தினசரி 500-க்கும் மேற்பட்டோரும், விடுமுறை தினங்  களில் அதிகமான மக்களும் வந்து  செல்கின்றனர். பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினர் அசோக்குமாரி டம் கடற்கரை மேம்பாட்டிற்கு நிதி  ஒதுக்க கோரிக்கை விடுத்துள் ளோம்.  

    புதுப்பட்டினம் கடற்கரையை ஆய்வு செய்து, கிராம மக்களிடம் ஆலோசனை நடத்தி அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்த நடவடிக்கை எடுத்தால், தமி ழகத்தின் பல்வேறு பகுதிகளிலி ருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவர். மேலும், கிராம ஊராட் சிக்கும் வருமானம் கிடைக்கும்.

    சாலை சீரமைப்பு, மின்விளக்கு  வசதி, கடற்கரையை சுத்தம் செய்ய  நிரந்தர பணியாளர்கள், நிழற் குடை வசதி, பாதுகாப்பிற்கு காவ லர்கள், குடிநீர் வசதி, கழிப்பறை  வசதி, குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா, புதுப்பட்டினம் - மனோரா  வரை படகுச் சவாரி உள்ளிட்ட வசதி கள் செய்து தந்தால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், குடும்பத்தோடு மக்கள் வந்து கொண்டாடும் இடமாக இந்தக் கடற்கரை இருக்கும்” என்றனர்