districts

img

திருச்சி முக்கிய செய்திகள்

விடுதலைப் போராட்ட வீரர் பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் சிலைக்கு மரியாதை

மதுரை, ஜூன் 6-  இந்திய விடுதலைப் போராட்ட வீரர், வைக்கம் போராட்டத்தில் பங்கேற்ற பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் அவர்களின் 137 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஜூன் 5 புதனன்று மதுரை யானைக்கல் பகுதியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலையணி வித்து மரியாதை செலுத் தப்பட்டது. 

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி க்கு  மாவட்டத் தலைவர் கே. அலாவுதீன் தலைமை வகித்தார். மாநகராட்சி துணை மேயர் தி.நாகரா ஜன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மத்திய- 2 ஆம் பகு திக்குழு செயலாளர் பி. ஜீவா, மாவட்டக்குழு உறுப்பினர் ஏ. பாண்டி, 49 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் அபுதாகீர், அருட் தந்தைகள் பெனடிக் பர்ணபாஸ், பால் பிரிட்டோ,  எஸ்.லாரன்ஸ் மற்றும் சிறுபான்மை நலக்குழு மாவட்ட செயலாளர் என். கணேசமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் ஏ. போனி பேஸ் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறையில்  77 மையங்களில் குரூப் –4 தேர்வு 

மயிலாடுதுறை, ஜூன் 6- மயிலாடுதுறை மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஜூன் 9 ஞாயிற்றுக்கிழமை யன்று முற்பகல் நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -4  (தொகுதி –4 ) பதவிக ளுக்கான தேர்வில் மயிலாடுதுறை வட்டத்தில் 11470, குத்தாலம் வட்டத்தில் 2660, சீர்காழி வட்டத்தில் 7340 மற்றும் தரங்கம்பாடி வட்டத்தில் 2440 என மயிலாடுதுறை மாவட்டத்தில்  77 மையங்களில் 23910 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர்.  

தேர்வுகள் சிறப்பாக நடைபெற மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி மற்றும் தரங்கம்பாடி ஆகிய நான்கு வட்டங்களுக்கும் தலா ஒரு துணை ஆட்சியர் நிலையில்  தேர்வு பணியை நடத்திட கண்காணிப்பு அலுவலர் கள்  நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.   தேர்வு எழுதுப வர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கூடுதல் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் நபர்கள் தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்குள் வருகை புரிய வேண்டும். 9 மணிக்கு மேல் வருபவர்களுக்கு அனுமதி இல்லை. செல்போன் போன்ற எலக்ட்ராணிக் பொருட்கள் எடுத்து வரவும் அனுமதி  இல்லை என்று மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.  

பத்ம விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சிராப்பள்ளி, ஜூன் 6- 2025 ஆம் ஆண்டிற்கு ஒன்றிய அரசின் பத்ம விருது களான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகள் பெறுவதற்கு ஒன்றிய அரசு அறிவிப்பு வெளி யிட்டுள்ளது.

இதில் விளையாட்டில் தகுதி மற்றும் திறமை உள்ள வர்கள்  தங்களுடைய முழு விவரங்களுடன், தங்களுடைய சாதனைக்கான ஆவணங்களுடன் ஜூன் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேற்காணும் விருதிற்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சிராப்பள்ளி (தொலைபேசி எண்.0431-2420685) என்ற  எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். 

கரூர் மாவட்டத்தில் 99  மையங்களில் குரூப்-4 தேர்வு

கரூர்,ஜூன் 6- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஜூன் 9 முற்பகல் மட்டும் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி –4 தேர்வில், கரூர் மாவட்டத்தில், 99 தேர்வு மையங்களில் 26,869 தேர்வர் கள் தேர்வு எழுத உள்ளனர். 

மேற்காணும் தேர்வர்கள், தேர்வு எழுத ஏதுவாக அனைத்து தேர்வு மையங்களிலும் நாற்காலி வசதிகள், சுகாதாரம், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், வெளிச்சம் மற்றும் மின்வசதி, போதிய காற்றோட்ட வசதி, தேர்வுக் கூடங்களுக்குச் செல்ல சிறப்பு பேருந்து வசதி போன்ற அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வுக்கூட அனுமதி சீட்டு  (Hall ticket) உள்ள தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். தேர்வர்கள் தேர்வு நாளன்று காலை 8 மணிக்குள் அவரவர்க்குரிய தேர்வு மையங்களுக்கு ஆஜராக வேண்டும். காலை 9 மணிக்கு மேல் தேர்வு மையங்களுக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வர்கள் கருப்பு பந்து முனை பேனா  (Black Ball point Pen) மட்டும் பயன்படுத்தவும் மற்றும் தங்கள் போட்டோ அடையாளத் திற்கான ஆதார் போன்ற ஏதாவது ஒரு அசல் அடை யாள அட்டையினை உடன் வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப் படுகின்றனர். மேலும், பென்சில், அழிப் பான்கள், கைப்பேசி (Mobile Phone), கணிப்பான்கள் (Calculator),  மின்னணு கடிகாரம் (Electronic Watch)  மற்றும் Bluetooth devices போன்ற எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு மையங்களுக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை.  மேலும் தேர்வர்கள் வினாத்தாளில் உள்ள அனைத்து வினாக்களுக்கும்  பதிலளிக்க வேண்டும் எனவும் பதில் தெரியாத வினாக்க ளுக்கு Option-E-யை கட்டாயம் தெரிவு செய்ய வேண்டும் எனவும்  கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல்   தெரிவித்துள்ளார்.




 

;