துறையூர், ஜூலை 12-
சாலை பணியாளர்களின் கோரிக்கை களை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு, போராட்டத்தை தூண்டும் கோட்டப் பொறி யாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலை பணியாளர்களில் தகுதி வாய்ந்த வர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண் டும். சாலை பராமரிப்பு பணி மேற்கொள்வ தற்கு கருவி, தளவாடங்கள், மழைக் கோட்டு, காலணி உள்ளிட்ட பாதுகாப்பு உப கரணங்களை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களை இழிவுபடுத்தி தாக்க முற்பட்ட சாலை ஆய்வாளர் ஏ.சுரேஷ், ஓட்டுநர்கள் என்.இளையராஜா, டி.கோபி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை பணியாளர்களை மனரீதியாக வும் பொருளாதார ரீதியாகவும் துன்புறுத்தி வரும் திருச்சி கிழக்கு சாலை ஆய்வா ளர் சத்தியமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சா லைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்டம் துறையூர் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி கோட்ட பொறியாளர் மு.கேசவன், வட்ட தலை வர் வி.கண்ணையன் தலைமை வகித்த னர். வட்டச் செயலாளர் பி.குமார் விளக்க வுரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் டி.மணிமாறன் சிறப்புரை ஆற்றி னார். வட்டப் பொருளாளர் எம்.கருப்பண் ணன் நன்றி கூறினார்.