districts

தொகுதி தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி

புதுக்கோட்டை, ஜூலை 12-

     தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி 1  மற்றும் தொகுதி 2 முதல்நிலைத் தேர்வுகளுக்கான ஒருங்கி ணைந்த இலவசப் பயிற்சி நடைபெறவுள்ளது.  

     இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா தெரிவிக்கையில், தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையம் தொகுதி 1 மற்றும் தொகுதி 2  முதல்நிலைத் தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த இல வசப் பயிற்சி வகுப்புகள் புதுக்கோட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளா கத்தில் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு தொடங்கப்பட உள்ளது.

    இந்நேரடி பயிற்சி வகுப்புகள் 14.7.2023 அன்று தொடங்கப்பட உள்ளன. இப்பயிற்சியின் போது இல வசப் பாடக் குறிப்புகள் வழங்கப்படும். ஒவ்வொரு பாடத்  திற்கும் மாதிரி தேர்வுகள், வினாடி வினா மற்றும் குழு  விவாதங்களும் நடத்தப்படும். எனவே தமிழ்நாடு அரசுப்  பணியாளர் தேர்வாணையம் தொகுதி 1 மற்றும் தொகுதி 2  போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் போட்டித் தேர்வர்கள், இந்த நேரடி பயிற்சி வகுப்பு களில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.