districts

திருச்சி முக்கிய செய்திகள்

தாமதப்படுத்தப்படும் பத்திரப் பதிவு: குடும்பத்துடன் விவசாயி தர்ணா

அரியலூர், மே 18 - சார் பதிவாளர் பத்திரப் பதிவை தாமதப்படுத்துவதாக கூறி, பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு விவசாயி தனது குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக இளம்பரிதி என்பவர்  பணியாற்றி வருகிறார். இவர் பத்திரப் பதிவுகளை தாமத மாக செய்வதாக, இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் ஜெயங்கொண்டம் அருகே கரடிகுளம் கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்த விவசாயி நடராஜன், தனது  குடும்ப சொத்துகளை உடன் பிறந்தவர்களுக்கு சமமாக பிரித்து கொடுப்பதற்காக வெள்ளியன்று காலை 10 மணிக்கு  பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு வந்துள்ளார்.  மாலை 5 மணி வரை காத்திருந்த விவசாயி நடராஜன்,  தாம் எழுதிய பத்திரத்தை சார் பதிவாளரிடம் கொடுத்துள்ளார்.  அப்போது மது போதையில் இருந்த சார் பதிவாளர், அதை  வாங்கிப் படிக்காமலேயே பத்திரத்தில் தவறு உள்ளதாக கூறி  விவசாயி நடராஜனை வெளியே அனுப்பியிருக்கிறார். நீண்ட நேரம் காத்திருந்த விவசாயி நடராஜன் மற்றும்  அவரது குடும்பத்தினர், சார் பதிவாளரிடம் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். பின்னர், நடராஜன் குடும்பத்துடன் பத்திரப் பதிவு அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட  முயன்றார். அப்போது அங்கிருந்த உறவினர்கள், இது  தொடர்புடைய மேல் அதிகாரியிடம் தெரிவித்து சார் பதிவா ளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி அவரை  சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர்.

ரேசன் கடைகளுக்கு அனுப்பப்படும் எடைக் குறைவான அரிசி மூட்டைகள் மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு புகார்

திருவாரூர், மே 18 - வலங்கைமான் வட்டத்தில் உள்ள ரேசன் கடைக்கு அனுப்பப்படும் அரிசி மூட்டைகள் எடை குறைவாக உள்ளதால், உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டுமென சிஐடியு மாவட்டச்  செயலாளர் டி.முருகையன் மாவட்ட ஆட்சிய ருக்கு மனு அளித்துள்ளார்.  அம்மனுவில், திருவாரூர் மாவட்டம் வலங் கைமான் வட்டத்தில் செயல்படும் நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி யின் அளவு தொடர்ந்து எடை குறைவாகவே அனுப்பப்படுகிறது.  ரேசன் கடைக்கு அனுப்பும் 50 கிலோ மூட்டைக்கு பதிலாக, 43 கிலோவில் இருந்து 47  கிலோ வரையிலான எடையில் எல்லா கடை களுக்கும் அனுப்பப்படுகின்றன. எடை குறை வாக அனுப்பப்படுவதால் நியாய விலை கடை  ஊழியர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படு கிறார்கள். இருப்பு குறைவதால் இதற்கு கடை  ஊழியர்களே பொறுப்பு ஏற்க வேண்டியிருக் கிறது. இதனால் அவர்கள் மன உளைச்ச லுக்கு ஆளாகும் நிலை உள்ளது. கடந்த காலங்களில் அரிசி ஒரு கிலோ குறை வுக்கு அபராதமாக ரூ.25 கட்ட வேண்டும். தற்போது ஒரு கிலோ அரிசி குறைந்தால் ரூ.45  அபராதம் கட்டும் நிலை உள்ளது. அதேபோல் சீனி ஒரு கிலோ குறைவுக்கு அபராதம் ரூ.50 என இருந்த நிலையில், தற்போது அபாரத் தொகை ரூ.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் துவரம் பருப்பு ஒரு கிலோவுக்கு அபரா தம் ரூ.75 என இருந்த நிலையில், தற்போது  ரூ.110 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் தான் அனைத்து பொருட்களும் அபராதத் தொகை அதிகமாகியுள்ளது. எடை குறையும் பொருளுக்கான அபராதத்  தொகையை நியாய விலைக் கடை ஊழியர்களே  வழங்கும் நிலை உள்ளது. எனவே, தாங்கள் உட னடியாக ஆய்வு செய்து எடை குறைவாக அனுப் பப்படும் பொருட்கள் குறித்து ஆய்வு செய்து, நட வடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. புகாரையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர்  சண்முகநாதன், சம்பந்தப்பட்ட கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை மேற் கொண்டார். அதன் அடிப்படையில் மாவட்ட குடோ னில் இருந்து கடைக்கு வரும் மூட்டைகளை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட துறைக்கு விசா ரணை அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வின்போது திருவாரூர் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் தமிழ்மணி மற்றும் வலங்கை மான் வட்ட வழங்கல் அலுவலர்கள் உடனிருந்த னர்.

கிடப்பில் உள்ள உதவித்தொகை  மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக! கட்டுமானத் தொழிலாளர்கள் கோரிக்கை

கரூர், மே 18 - கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் (ஆன்-லைனில்) பதிவு செய்து ஆண்டு கணக்கில் கிடப்பில் உள்ள திருமண உதவி, கல்வி உதவி, இயற்கை மரணம், விபத்து மரணம் உள்ளிட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து பயனாளிகளுக்கு உரிய பணப் பயன்களை வழங்க வேண்டும்.  வீடு கட்டும் திட்டத்திற்கு பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பணப் பயன்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் தொழிலாளர் துறை உதவி ஆணையரிடம் (சமூக பாதுகாப்பு திட்டம்), கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) கரூர் மாவட்டக்குழு சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் சி.ஆர்.ராஜாமுகமது, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் மு.சுப்பிரமணியன், கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் ப.சரவணன், கரூர் ஒன்றியச் செயலாளர் கே.ராஜேந்திரன், எல்.ராபின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பருவத்தேர்வு முடிவுகள் வெளியீடு 

தஞ்சாவூர், மே 18-  மாணவர்களின் உயர்கல்வியைக் கருத்தில் கொண்டு, தமிழ்ப் பல்கலைக்கழக வளாகக் கல்வியில் பயிலும் மாணவர்களின் மே 2024 பருவத்தேர்வு முடிவுகள், தமிழகப் பல்கலைக்கழகங்களிலேயே முதலாவதாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழக வளாகக் கல்வியின் வழியாக இளங்கல்வியியல், கல்வியியல் நிறைஞர், முதுகலை (தமிழ், வரலாறு, நாடகம், இசை, சிற்பம்), முதுஅறிவியல் (கணிப்பொறி, சுற்றுச்சூழல் அறிவியல்), ஒருங்கிணைந்த முதுகலை (தமிழ், வரலாறு, நாடகம்), முனைவர் பட்டம், பட்டயம், சான்றிதழ் ஆகிய பட்டப்படிப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு (சுமார் 900 பேர்) மே 2024 பருவத் தேர்வுகள் மே 2 முதல் மே 11 வரை நடைபெற்றன.   தேர்வு முடிவுகளை புலத் தலைவர்கள் முன்னிலையில், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்(பொ) முனைவர் பெ.இளையாப்பிள்ளை வெள்ளிக்கிழமை வெளியிட்டார். இதில், தேர்வு எழுதிய மாணவர்களில் 86 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஓய்வுபெற்ற விஏஓ கொலை வழக்கில் மருமகன் உள்பட 2 பேர் கைது

தஞ்சாவூர், மே 18- தஞ்சாவூர் அருகே ரெட்டிப்பாளையம் பெரி யார் நகரைச் சேர்ந்தவர் ராஜ.மனோகரன் (71). இவர் திருவாரூர் மாவட் டத்தில் கிராம நிர்வாக அலுவலராகப் பணி யாற்றி ஓய்வு பெற்றவர். இவர் வீட்டிலுள்ள குளிய லறையில் வாயில் துணி  அடைக்கப்பட்டும், கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும் வியாழக் கிழமை காலை உயிரி ழந்து கிடந்தார். இதுகுறித்து மருத்து வக் கல்லூரி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில்,  மனோகரனின் மூத்த மகள் மனோ ரம்யா திரு மண தகவல் மைய செயலி மூலம் திருப்பூர்  மாவட்டம், பல்லடம் அரு கேயுள்ள பூமாலூரைச் சேர்ந்த ஜி. ராஜ்குமாரை (43) காதல் திருமணம் செய்து கொண்டார். இரு வருக்கும் இடையே ஏற் பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 3 மாதங் களுக்கு முன்பு மனோ ரம்யா விவாகரத்து பெற் றார். இதற்கு பழிவாங்கும் நோக்கத்துடன் வீட்டில் இருந்த மனோகரனை, ராஜ்குமார் தனது உற வினரான திருப்பூர் மாவட் டம், அவினாசி அருகே யுள்ள காரநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த எம்.சரவணகுமாருடன் (25) இணைந்து கொலை செய்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ராஜ்குமாரையும், சர வணகுமாரையும் காவல்  துறையினர் வெள்ளிக் கிழமை கைது செய்த னர்.

பள்ளி வாகனங்கள் ஆய்வு

அரியலூர், மே 18- அரியலூர் அரசினர்  மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதா னத்தில், பள்ளி வாக னங்கள் சனிக்கிழமை ஆய்வுக்கு உள்படுத்தப் பட்டன. கோடை விடு முறைக்கு பிறகு ஜூன்  முதல் வாரத்தில் பள்ளி கள் திறக்கப்படவுள்ளன. இதையொட்டி அரிய லூர் மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளி  வாகனங்கள் அனைத்தும்  வட்டார போக்குவரத்து அலுவலர்களின் ஆய் வுக்கு உட்படுத்தப்பட்டன. மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா, பள்ளி வாகனங்களை நேரில் பார்வையிட்டு, வாகனங்களின் பதிவுச் சான்று, ஓட்டுநர் உரிமம், நடத்துநர் உரிமம்,  முதலுதவிப் பெட்டி, அவ சர வழி, தீயணைப்புக் கருவி, படிக்கட்டுகள், கதவுகள், ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு பாது காப்பு அம்சங்கள் குறித்து  ஆய்வு செய்தார்.

தனியார் கல்வி நிறுவனங்களின் குறைகளை தெரிவிக்க புகார் எண் தேவை இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, மே 18 - புதுக்கோட்டையில் தனியார் கல்வி நிறுவனங்களில் உள்ள குறைபாடுகள் குறித்து புகார் தெரிவிக்க, மாவட்ட நிர்வாகம் பொதுவான புகார் எண் ஒன்றை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் சந்தோஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சா. ஜனார்த்தனன், துணைச் செயலர் பாலாஜி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், தனியார் பள்ளிகள் மாணவர்களின் மதிப்பெண்களை வியாபாரமாக்கி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை உடனே அகற்ற வேண்டும். விருப்பப் பாடம் மற்றும் துணைப் பாடம் என்ற பெயரில் சமஸ்கிருத வகுப்பு, பஜனை வகுப்புகளை அனுமதிக்கக் கூடாது. முகவர்கள் மூலம் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தும் நடவடிக்கையைத் தடுக்க வேண்டும். இடைநிற்றல் ஏற்பட்ட மாணவர்கள் அசல் சான்றிதழ் பெறுவதற்கு பணம் கேட்டு பேரம் பேசும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது புகார் தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவி எண் அறிவிக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து இவற்றை வலியுறுத்தி கோரிக்கை மனுவும் ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள பெட்டியில் போடப்பட்டது.

முந்திச் செல்வதில் நடந்த போட்டி தனியார் பேருந்து வயலில் விழுந்த விபத்தில் 20 பயணிகள் காயம்

திருவாரூர், மே 18 - நன்னிலம் அருகே தனியார் பேருந்துகள் முந்திச் செல்வதில் ஏற்பட்ட போட்டியால் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர்  நோக்கி தனியார் பேருந்துகள் வரும்போது சாலையில் போட்டி போட்டுக் கொண்டு வருவது வாடிக்கையான ஒன்று. இந்நிலை யில் சனிக்கிழமை வழக்கம்போல் இரண்டு  தனியார் பேருந்துகள், மயிலாடுதுறையி லிருந்து திருவாரூர் நோக்கி மிக வேக மாக வந்துள்ளன. இதில் இரண்டு பேருந்து களுக்கும் இடையே முந்திச் செல்வதில் போட்டி ஏற்பட்டுள்ளது. அப்போது, நன்னிலம் ஒன்றியம் முடி கொண்டான்-தென்குடி ஆர்ச் அருகே, ஒரு தனியார் பேருந்து சாலையில் இருந்து விலகித் தாறுமாறாக ஓடிச் சென்று வயல்வெ ளியில் விழுந்தது. மற்றொரு தனியார் பேருந்து வேகமாக நிற்காமல் சென்று விட்டது. வயல்வெளியில் விழுந்த தனியார்  பேருந்தில் பயணித்த 20-க்கும் மேற்பட்ட பய ணிகள் காயங்களுடன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் நன்னிலம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து நன்னிலம் காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து மேற்கொண்டு வருகின்றனர்.  தனியார் பேருந்துகளிடையே நிலவும் முந்திச் செல்லும் போட்டியால், இந்த விபத்து  ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி னர்.

 

 

;